- சீர்காழி சிவ.ஆ. மலர்விழி ராஜா
பாஞ்சாலங் கோட்டையிலே பார்போற்ற வாழ்ந்தவனே !
வீரத்தின் விளைநிலமே வீரபாண்டிய கட்டபொம்மனே !
மண்ணை காக்க மக்களுக்காக வாழ்ந்தவனே !
பாரதத்தின் பெருமை
காக்க பிறந்தவனே !
காலத்தை வீரத்தால் கடந்த கட்டபொம்மனே !
வரிகேட்ட வெள்ளையனை வணங்கமறுத்த தீரனே !
வாள்பேச்சின் வீர ஒலி
வான்வரையில் தொட்டவனே !
அஞ்சாத நெஞ்சம் கொண்ட அதிவீரபாண்டியனே !
சங்கிலியால் பிணைத்தாலும் சுதந்திரகாற்றை சுவாசித்தவனே !

தாய்மண்ணின் வீரம் போற்றும்
தலைமகனே !
தாழ்ந்திடாமல் சிங்கமென தன்மானம்
காத்தவனே !
கயத்தாற்றின் காற்றுகூட
கட்டபொம்மன் கதைசொல்லும் !
தூக்குகயறு முன்னே வந்தும் தோல்வியின்றி
நின்றவனே !
சுதந்திரதாகம் ஒன்றே
சுவாசமென சென்றவனே !
வாழ்க நின் புகழ்
அஞ்சாமையே வாழ்வுஎன.....
அச்சத்தை மடமையாக்கி அறவழியில்
வாழ்ந்தவனே !
போற்றுகிறேன் உனது புகழ்வாழ்கவென்று!
அஞ்சாத நெஞ்சமும்
உறுதியான தீரமும் கொண்டவனே !
கடலலைப்போல உனது வீரம் போற்றிடுவோம் !
வெல்க வீரம் !
வாழ்க பாரதம் !
வளர்க செந்தமிழ் !
தமிழ்நாட்டில்.. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: 11 மாவட்டங்களில் இன்றே மழை
ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் அடுத்த தலைமுறைக்கானதா?
Travel Time: அதிகம் கேட்கப்படாத ஹாரன்.. மனம் கவரும் கேரளம்!
US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!
ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!
ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!
Short Story: மனைவியின் அருமை
Chettinadu Recipes: அருமையான செட்டிநாட்டு ரெசிப்பி .. முருங்கைக் கீரை எள்ளு பொடி!
Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?
{{comments.comment}}