Happay Independence Day: 80 ஆண்டுகள் தொட்டு விட்டோம்.. எழுச்சி எண்ணம் தொடர்ந்திட்டோம்!

Aug 14, 2026,05:39 PM IST

- கவிதாயினி டாக்டர் எஸ். மணிமேகலை


எண்பது ஆண்டுகள் தொட்டுவிட்டோம் இன்று சுதந்திர திருநாடு.

எழுச்சி எண்ணம் தொடர்ந்திட்டோம்   பாரதத் திருநாடு


காந்தியின் கரத்தில் கனிந்தது சத்தியம்  கதர் மணம் வீசியது

கட்டுக்கள் உடைந்து களம் இறங்கியது கனவுகள் நனவானது


நேதாஜி நெஞ்சில் தீக்கணலாய் எரிந்ததுநாட்டுப்பற்று

நேருவின் நெஞ்சில் நிமிர்ந்து நின்றது நெடுங்கனவு


பாரதி பாடிய பாரதத் தாயின் பெருமை பாரீர்

பகத்சிங் போன்ற பல வீரர்களின் பலிதம் போற்றீர்.




அறிவியல் விண்ணில் அணுகுண்டு அல்ல

அது அறிவின் விளக்கு


அன்னை பாரதம் காட்டும் சாதனை

அது அண்டம் அளக்க


விவசாயம் செழிக்க விஞ்ஞானம் பெருக விரிந்தது நம் நாடு

வீரம் நிறைக்க கல்வி சிறக்க உயர்ந்தது நம் நாடு


என்பதாம் ஆண்டில் இன்று அடி எடுத்து வைக்கிறோம்

எல்லை காக்கும் வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்


சாதி மதம் கடந்து நின்று சாதிப்போம் இன்றும்

சுதந்திரத் தாயின் திருப்பாதம் தொட்டு வணங்கிடுவோம் என்றும்


வாழ்க பாரதம் வளர்க பாரதம்

வெல்க பாரதம் உயர்க பாரதம்

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில்.. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: 11 மாவட்டங்களில் இன்றே மழை

news

ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் அடுத்த தலைமுறைக்கானதா?

news

US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!

news

ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!

news

ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!

news

Chettinadu Recipes: அருமையான செட்டிநாட்டு ரெசிப்பி .. முருங்கைக் கீரை எள்ளு பொடி!

news

Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?

news

சிவசங்கரி.. சமூக நியாயங்களையும்.. மனித உணர்வுகளையும் ஆழமாகத் தொட்டவர்!

news

Travel Time: அதிகம் கேட்கப்படாத ஹாரன்.. மனம் கவரும் கேரளம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்