- டிலாணி ஸ்ரீதரன்
வானுயராத மனிதரெல்லாம்
தானுயர வாய்மொழியாகிய தமிழோ?
அழியாத செல்வமாகி ஒளியாகிய கல்வியெனும் கலையோ?
விழியாகி பார்வையில் மொழியாகிய உடலின் உயிர்ப்போ?
கலையாத அமைதியாக கண்ணசைவில் கதையளக்கும் கன்னித்தமிழோ?
உளியாக செதுக்கி வலிகளை உணர்வில் உரைக்கும் சிலையோ?
ஆழியாக ஆர்ப்பரித்து வழியாகி வாழ வைக்கும் முத்தமிழின் மூச்சோ?
வேலியாக பாதுகாக்கும் போலியற்ற மென்மையான புன்னகையின் நகலோ?
இழிவாக பேசிடுவோரையும் வழிநடத்தும் உதிரத்திலுறைந்த ஆயுதமோ!
ஒலியாக குரலாகி கலியுகமாளும் ஐயனின் குறளோ?
செழிப்பாக செந்தமிழாகி விழிப்புணர்வாக்கும் சமூகத்தின் சாட்டையடியோ?

முழி பிதுங்கிட கேள்வியாகி பழி போடுபவரை வாழியவே என வாழ்த்தும் கவியோ?
பொலிவிழக்காத மழலைகளின் களிப்படையும்
கள்ளங்கபடமற்ற குறுநகையோ?
பாலின் வெண்மையும் வாளின் கூர்மையுமான தன்மையோ?
வெளியுலகத்தை புடம் போடும் சுழியத்தின் பெறுமதியோ?
அளிக்கும் அமுதாக அருந்தமிழாக வாலியின் பாடலாகத் திகழ்ந்து
ஒரு சொல்லில் ஓராயிரம் கரு சுமந்து வாழட்டும் பல்லாண்டு!!!!!!!
வான் புகழ் கண்ட என் தாய் மொழி வாழிய வாழியவே!!!!
World Daughters Day: இரவில் நீலாம்பரியாய் தாயாகி தாலாட்டுபவள் அவள்!!
சர்வதேச மகள்கள் தினம்.. மகாலட்சுமியின் ரூபமே பெண் குழந்தைகள்!
மகள் இல்லாக் குறையைப் போக்க வந்த மருமகள்!
தென்தமிழ் தலையங்கம்: சுற்றுலா.. மனிதத்தையும் தேசத்தையும் இணைக்கும் பாலம்!
மகாளயபட்சம்.. முன்னோர்களுக்குத் தர்ப்பணம், அன்னதானம் செய்வது சிறப்பு!
முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு
மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை
தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?
{{comments.comment}}