Poem: இ(ரு)தயம்!

Su.tha Arivalagan
Jul 06, 2026,11:43 AM IST

- டிலாணி ஸ்ரீதரன்


அன்பெனும்

அமுதத்தின்

அழியாதச்

சின்னம்


ஆழியைப்போல்

ஓய்வில்லாமல்

துடிக்கும்

கலைவண்ணம்


ஆசைகளையும்

கற்பனைகளையும்

சேமிக்கும்

களஞ்சியம்




விழிப்பார்வையில்

விழுந்திடும்

காதலர்களின்

இணைப்பகம்


வியக்கும்

எண்ணங்களைச்

செய்திடும்

விசித்திரம்


பண்பின்

பாசத்தின்

மெளனத்தின்

உறைவிடம்


மூளையின்

திறனையும் 

உள்வாங்கும்

அற்புதம்


கலைஞர்களின்

கலையுணர்வுகளில்

மகிழ்ந்திடும்

சங்கமம்


ஐம்புலன்களின்

உணர்வுகளும்

என்னில்

தஞ்சம்


எனக்கீடாக

எதைத் 

தந்தது

பிரபஞ்சம்