- பாவலர் மாயோன் மங்கை
நிலவே
நீ அழகுதான்
இல்லையென்று
சொல்லவில்லை
ரசிக்கத் தான் முடியும்
அருகே வரப்போவதில்லை
கதிரே
நீ கண்ணைப் பறக்கும்
செம்மை தான்
எழுவதும்
விழுவதுமாகவே நீ
ஆனால்
நான் வரமுடியாது
மழையே
வரும்முன்
குளிரூட்டி
வெள்ளிக் கம்பியின்
சாரலாய் வரும்போது

இரு கை விரித்து
உன்னை நாவில் சுவைத்து சுற்றிச்சுற்றி
மகிழ்ந்த காலங்கள்
நினைவுகளிலே
ஆனால்
இப்பொழுதோ
நிலவுகாய்க்கிறது
கதிரே குளிர்கிறது
மழையை வெறித்துப்
பார்த்துக்கொண்டே
அது ஏன்?
எப்படி இப்படி?
தோழியிடம் கூறினேன்
உன் நெஞ்சத்தில்
அவன் மஞ்சம் கொண்டு தஞ்சம் என்றாள்
ஓஓஓஓஓ
அது தானா இந்த மாற்றம்
ம்ம்ம்
அவனுக்கும் மாற்றம்
வந்திருக்குமோ!!
எப்படி அறிவது
வண்டேஏஏஏ. அறிந்து வாஆ
காற்றேஏஏஏ அறிந்து வாஆ
வரும்வரை
இணையா இசையுடன்
இவள்........
கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!
Sunday Special: சுவையான மக்ரூனி பிரியாணி.. சாப்ட்டுப் பாருங்க.. கிறங்கிப் போய்ருவீங்க!
கதை கேளு... கதை கேளு!
Malliga Selvaraj: அன்னை மடி!
தென்தமிழ் தலையங்கம்: திரைக்கலைத் தாத்தா சிங்கீதம் சீனிவாச ராவ்!
Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!
தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!
தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்
மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்
{{comments.comment}}