தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிப்பதைத் தவிர வேறு வழி இல்லை.. மு.க.ஸ்டாலின்
சென்னை: திமுக கோரிய கோரிக்கைகளையும் இணைத்து மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தொகுதி மறுவரையறை திருத்த மசோதாவை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை. இதை ஆதரிக்காவிட்டால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தனது வீட்டில் இன்று தன்னைச் சந்தித்த இந்தியா கூட்டணித் தலைவர்களுடன் நடந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார் மு.க.ஸ்டாலின். அப்போது அவர் கூறுகையில், சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிற இந்தியா கூட்டணித் தலைவர்களைச் சந்தித்தேன்.
முன்மொழியப்பட்டுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கக் கூடாது. இதுதொடர்பாக எடுத்துள்ள நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
ஆனால் இந்த மசோதா தோற்கடிக்கப்பட்டால், தமிழ்நாட்டிற்கு இருக்கும் குறைந்தபட்சப் பாதுகாப்புகளைக் கூட நாம் இழக்க நேரிடும்... இத்தகைய சூழ்நிலையில், இந்த மசோதாவை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை. அவர்களிடம் மாற்றுத் தீர்வும் இல்லை.
தொகுதிகள் சீரமைக்கப்பட்டால்.. தமிழ் கலாச்சாரத்தை பாஜக அழித்து விடும் -ராகுல் காந்தி
இப்போதைய மசோதா நிறைவேறாவிட்டால், 2027-ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள தொகுதி மறுவரையறை நடவடிக்கை தென் மாநிலங்களுக்குப் பாதகமாக அமையும்... இந்தியா முழுவதிலுமிருந்து தலைவர்கள் இங்கு வந்துள்ள நிலையில், நேற்றும், இன்றும், என்றும் எங்கள் நிலைப்பாடு ஒன்றுதான். தமிழ்நாடுதான் முதன்மையானது என்றார் மு.க.ஸ்டாலின்.