2026 தேர்தலிலும் திமுக.,வுக்கு தான் வெற்றி...முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
மாமல்லபுரம் : 2026 தமிழக சட்டசபை தேர்தலிலும் திமுக.,வுக்கு தான் வெற்றி என மாமல்லபுரத்தில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் பேசிய திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாமல்லபுரத்தில் திமுக சார்பில் "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" என்ற பெயரில் பயிற்சி கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் இன்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், 2026 தேர்தலிலும் நாம் தான் வெற்றிபெறப் போகிறோம். ஆணவத்தில் சொல்லவில்லை. உங்கள் உழைப்பு, ஆட்சியின் சாதனை, மக்கள் மேல் உள்ள நம்பிக்கையில் இதை சொல்கிறேன். 2019 ஆம் ஆண்டு முதல் அனைத்து தேர்தல்களிலும் மகத்தான் வெற்றியை பெற்று வருகிறோம்.
சுணங்கி சும்மா இருந்து விட்டால் நாம் ஒரே இடத்தில் தேங்கிவிடுவோம். உழைப்பைக் கொடுத்து லட்சியத்தை நோக்கி இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். அது தான் இயக்கம். 7வது முறையாக திமுக ஆட்சி அமைப்பதற்காகவே இந்த பயிற்சி கூட்டம். 2026ல் நடக்க இருப்பது தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற தேர்தல். தனித்தன்மையோடு தலை நிமிர்ந்து நிற்கும் நமது ஆட்சியா? அல்லது டில்லிக்கு வளைந்து கொடுக்குற அடிமைகளின் ஆட்சியா? என தீர்மானிக்கும் தேர்தல்.
தமிழ்நாட்டை நிரந்தமாக ஆளும் தகுதி திமுகவுக்கே இருக்கிறது என்பதை நிரூபிக்கணும். கலைஞரின் உடன்பிறப்புகள், நினைத்ததை செஞ்சு காட்டுவாங்கனு புரிய வைக்கணும் என பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசி உள்ளார்.