சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் SIR எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ள நிலையில் அதுகுறித்து விவாதித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக நவம்பர் 2ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சார் எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை தொடங்கப் போவதாக தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. இந்த சார் திருத்தப் பணிகள் பீகாரில் மேற்கொள்ளப்பட்டப்போது பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. உச்சநீதிமன்றம் வரை விவகாரமும் போனது. இருப்பினும் சார் பணிகளுக்கு உச்சநீதிமன்றம் இதுவரை தடை விதிக்கவில்லை.
இந்த நிலையில் தற்போது விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்காளம், கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் சார் பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பையும் இன்று அறிவித்தது. பிப்ரவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூடி முக்கிய ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்குப் பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தேர்தலுக்கு மிக நெருக்கத்தில், அதுவும் பருவமழைக் காலமான நவம்பர், டிசம்பர் மாதங்களில் SIR மேற்கொள்வது நடைமுறைச் சவால்கள் நிறைந்தது. அவசரகதியில் செய்யப்படும் SIR நடவடிக்கை மக்களின் வாக்குரிமையைப் பறித்து, பா.ஜ.க.வுக்குச் சாதகமாகத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சதியாக அமைந்துள்ளது.
ஏற்கெனவே, பீகாரில் பெண்கள், சிறுபான்மையினர், பட்டியல் - பழங்குடியின மக்கள் உள்ளிட்டோர் அதிக அளவில் வாக்காளர் பட்டியிலில் இருந்து நீக்கப்பட்டதுடன், இந்த நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இல்லாததும் சேர்ந்து, கடும் ஐயத்தை அனைவரது மனதிலும் எழுப்பியிருக்கிறது.
தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் SIR மேற்கொள்ளப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசியிருக்கிறோம். அதன் அடிப்படையில் வரும் நவம்பர் 2 அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கக் கூட்டம் நடத்தப்படும்.
மக்களின் வாக்குரிமைதான் ஜனநாயகத்தின் அடிப்படை. அதனைப் பறிக்கத் துணியும் ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்று அதில் அவர் கூறியுள்ளார்.
திமுக - அதிமுக ஜல்லிக்கட்டு.. எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட 2 முக்கிய அறிவிப்புகள்!
தமிழ்நாடு தலைகுனியாது.. 234 தொகுதிகளிலும்.. பிரச்சாரத்தைத் தொடங்கும் திமுக
விஜய்யின் நிலைப்பாடு என்ன என புரியவில்லை... செங்கோட்டையன் விவகாரம் குறித்து டிடிவி தினகரன் விளக்கம்
ஜனநாயகன் பட வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரிக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவு
மதுரையிலிருந்து ஏன் என்னை வம்புக்கு இழுக்கிறீர்கள்.. எம்.எல்.ஏ தளபதிக்கு ஜோதிமணி கேள்வி
தாடி பாலாஜி.. Nooo.. இனி பொதுச் செயலாளர் பாலாஜி.. புதுச்சேரியில் அடித்த லக்கி பிரைஸ்!
டிங்டாங் டாங் டிங்டாங்.. இரண்டும் ஒன்றோடு ஒன்று.. அது ஏன் நிமிஷத்துக்கு 60 விநாடி?
தங்கம் விலை இன்று சற்று குறைந்தது ... வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.400 நோக்கி உயர்வு!
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
{{comments.comment}}