தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!

Mar 13, 2026,04:58 PM IST

- வீ. தமிழ்ச்செல்வி


தை பிறந்தால் வழி பிறக்கும் ஆம்!! உண்மைதான்!! தை மாதம் ஊரே கொண்டாடும் பொங்கல் பிறக்கும் திருநாள். 


புத்தாடை அணிய வயல்கள் அறுவடை முடிய  நெல் களத்தில் இருந்து மூட்டை மூட்டையாய் கொண்டு வந்து அடுக்கி  வீட்டுத் தொம்பை நிறைத்து வீட்டிற்கு வண்ணமிட ஒரு பெரிய பானையில்  எடுத்து  சுண்ணாம்பு கரைத்து தம்பியும் தங்கையும் தெளித்து விளையாடி அப்பாவின் அம்மாவின் மிரட்டலுக்காக ஒளிந்தும், பயந்தும், ஓடியும்  இப்படியும், அப்படியும் மேலும் கீழும் சுவரில் வெள்ளை வண்ணம் இட்டு தினை மாவும், சோளமாவும் தின்பண்டமாக பெற்று அந்திப் பொழுது நேரத்தில் தாத்தா, பாட்டி, அக்கா, அத்தை, மாமா என்று கூடி பேசி எப்போதும் கலையான முகத்தில் கலையாத சிரிப்புடன் சுற்றித்திரிந்த நாட்கள்.


ஒரு திருவிழாவைப் போல ஊர் கூடி ஓங்கார மூர்த்தி முதல் வெள்ள எல்லை தெய்வம் வரை அழைத்து கும்பிட்டு அங்கு மாடு இட்ட  சாணத்தை எடுத்து வந்து லாபம் என வீட்டு சுவற்றில் எழுதி சிட்டுக்குருவிக்கும் உணவிட நெல்மணி இழைகளை வாசலிலே கட்டி இன்பம் என்றும் இனிதே!! இனிதே!! நீங்கா நினைவுகளில் பொங்குகிறது இன்றைய தைத்திருநாள்!!


"தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற முதுமொழியை ஊர் சொல்லக் கேட்டதுண்டு. ஆனால், அந்த வழியை விட அந்த வீட்டின் வெள்ளையடித்த சுவர்கள்தான் நம் நினைவில் இன்றும் மின்னுகின்றன. பெரிய பானையில் சுண்ணாம்பு கரைத்து, தம்பியும் தங்கையும் மாறி மாறித் தெளித்து விளையாடியதும், அப்பாவின் அதட்டலுக்கும் அம்மாவின் மிரட்டலுக்கும் பயந்து அந்த ஈரச் சுவர்களுக்குப் பின்னே ஒளிந்து கொண்டதும்... இப்போது நினைத்தாலும் இதழோரம் ஒரு புன்னகை பூக்கிறது.




வயல்களில் அறுவடை முடிந்து, நெல் மணிகள் மூட்டை மூட்டையாய் வீடு வந்து சேரும் அந்த கம்பீரம்! வீட்டுத் தொம்பை (நெற்களஞ்சியம்) நிறையும் போது, ஏதோ உலகத்துச் செல்வமே நம் வீட்டுக்குள் புகுந்துவிட்ட திருப்தி. வாசலில் சிட்டுக்குருவிகளுக்காகக் கட்டிய நெல்மணி இழைகளில், அந்தச் சின்னஞ்சிறு பறவைகள் வந்து அமர்ந்து கொத்திச் செல்லும் போது கிடைத்த மகிழ்ச்சி, இன்றைய எந்தத் தொழில்நுட்பத்திலும் இல்லை.


தாத்தா, பாட்டி, அத்தை, மாமா என ஊரே கூடிப் பேசி, அந்திப் பொழுதில் தினை மாவும் சோள மாவும் தின்பண்டங்களாகக் கைமாறிய அந்த நாட்கள்... அது வெறும் பண்டிகை அல்ல, அது ஒரு பாசப் போராட்டம். ஊர் எல்லைத் தெய்வம் முதல் ஓங்கார மூர்த்தி வரை அழைத்து வணங்கி, வாசலில் மாட்டுச் சாணத்தால் "லாபம்" என எழுதி வைத்த அந்தப் பாரம்பரியம், இன்றும் நம் வாழ்வின் செழிப்பிற்கு அச்சாரமாய் இருக்கிறது.


(தமிழ்ச்செல்வி வீ, பட்டதாரி ஆசிரியர், அஉப,   அங்கு செட்டிப்பாளையம், பண்ருட்டி ,கடலூர் மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

news

ஜூன் 22.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் .. புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்க திட்டம்!

news

பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை

news

தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!

news

"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு

news

4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரணைக்கு ஏற்பு

news

"எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

news

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அக்கறை காட்ட வேண்டும்! உதயநிதி ஸ்டாலின் காட்டம்

news

முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்