கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. போராட்டக்காரர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை

Aug 01, 2026,05:04 PM IST

பெங்களூரு: காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகக் கர்நாடகாவில் உள்ள முக்கிய அணைகள் நிரம்பி வழியும் நிலையை எட்டியுள்ளன. இதையடுத்து தற்போது கபிணி அணையிலிருந்து விநாடிக்கு 5000 கன அடிநீர் என்ற அளவில் தண்ணீரைத் திறந்து விட்டுள்ளது கர்நாடக அரசு.


முன்னதாக, தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிவிக்கப்பட்டுள்ள முழு அடைப்புப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று கர்நாடக மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார் வலியுறுத்தியிருந்தார். தண்ணீரை அடைத்து வைத்தால் நாம் எல்லாம் அதில் மூழ்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.


காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் ஓய்வில்லாமல் தொடர்மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளுக்கான நீர்வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக கே.ஆர்.எஸ், கபினி உள்ளிட்ட கர்நாடக அணைகள் தங்களின் முழுக் கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளன. அணைகளின் கொள்ளளவு முழுமையடையும் போது, பாதுகாப்புக் கருதி உபரி நீரை ஆற்றில் திறந்து விடுவது தவிர்க்க முடியாத நடவடிக்கையாக மாறியுள்ளது.


இது தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார், "இயற்கை என்பது குறிப்பிட்ட ஒருவருக்கு அல்லது ஒரு மாநிலத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல. அணைகள் நிரம்பிய பிறகும் தண்ணீரைத் திறக்காமல் தொடர்ந்து தேக்கி வைத்தால், பெருவெள்ளம் ஏற்பட்டு அனைவரும் அதில் அடித்துச் செல்லப்படும் ஆபத்து உருவாகும். மக்களின் உயிரையும், அணைகளின் கட்டமைப்புப் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டே நீர் திறந்து விடப்படுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.


ஆகஸ்ட் 13 போராட்டத்தை வாபஸ் பெற அழைப்பு:




தமிழகத்திற்கு காவிரி நீரைத் திறந்துவிடுவதைக் கண்டித்து கர்நாடகாவில் ஆகஸ்ட் 13-ஆம் தேதி முழு அடைப்பு (Bandh) போராட்டம் நடத்தச் சிலர் திட்டமிட்டுள்ளனர். "அணைகளின் நிலையையும் இயற்கைச் சூழலையும் உணர்ந்து, தமிழ்நாட்டிற்கு எதிரான கடையடைப்பு மற்றும் போராட்ட அறிவிப்புகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்" என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


தமிழகத்தின் பாசனத்திற்காக காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது, மேகதாது அணை கட்டுவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசுவதற்காக தமிழக முதல்வர் விஜய், ஆகஸ்ட் 03ம் தேதி கர்நாடகா செல்வதாக இருந்தது. ஆனால் கர்நாடகாவில் விஜய் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு வந்ததால், இப்போதைய சூழலில் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் என டி.கே.சிவக்குமார் நேற்று கூறி இருந்தார். 


அதே சமயம், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என அவர் திட்டவட்டமாக கூறி வந்தார். ஆனால் தற்போது கர்நாடக அணைகள் அனைத்தும் நிரம்பும் நிலையில் உள்ளதால் காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகா முடிவு செய்துள்ளது. ஆனால் அரசின் இந்த முடிவிற்கு அங்குள்ள சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து, பந்த் அறிவித்துள்ளன.


இந்த நிலையில்தான் தற்போது கபிணி அணையிலிருந்து விநாடிக்கு 5000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இது படிப்படியாக அதிகரிக்கப்படும் என்றும் தெரிகிறது. அணைக்கு விநாடிக்கு கிட்டத்தட்ட 16,000 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

news

"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்

news

கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!

news

ஒற்றுமையின்றி செயல்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை : ராகுல் காந்தி எச்சரிக்கை

news

கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. போராட்டக்காரர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை

news

வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!

news

வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!

news

கட்டணச்சலுகை இல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்!

news

தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்