"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"

Sep 19, 2026,05:07 PM IST

- எம்.எல். பிரபா


மீனாவும் ,சுஜியும் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று ஒரு டூவீலர் வண்டி பக்கத்தில் இருந்த தெருவில் இருந்து திரும்பி வந்தது. அதை கவனிக்காமல் ஓடிய சுஜி வண்டியில் மோதி கீழே விழுந்து கை, கால்களில் அடிபட்டுவிட்டது. சுஜி வலியால் கத்தினாள். மீனா பயத்தில் கத்தினாள்.


டூவீலரில் வந்தவருக்கும் கீழே விழுந்ததில் காலில் அடிபட்டு விட்டது. சுஜி பயத்தில் மயக்கமானாள். தெருவில் வந்தவர்கள் அவர்களை தூக்கி உட்கார வைத்தார்கள். மீனாவின் கூச்சலை கேட்டு உள்ளே  இருந்து வந்த  அவள் அப்பா மீனாவைப் பார்த்து உனக்கு அடிபட்டதா? உனக்கு ஒன்னும் ஆகலையே! என்றார். இல்லப்பா ,சுஜி தான் கீழே விழுந்துட்டா. அவளை பாருங்க என்ன சொல்லிக் கொண்டே ஓ..வென அழுதாள். 


அதற்குள் சாலையில் சென்றவர்கள் சுஜியை தூக்கிக் கொண்டு வந்து வராண்டாவில் உட்கார வைத்தார்கள். மீனாவின் அம்மா அவள் முகத்தில் தண்ணீர் தெளித்தாள். சுஜி கண் முழி க்கவில்லை .அவள் பயந்து போய் சுஜி அம்மாவுக்கு போன் செய்தாள். சுஜி அம்மா அலறி அடித்துக் கொண்டு வந்து ஐயோ!! என்ன ஆச்சு? சுஜி ,எழுந்திரு என்று கத்தினாள். உடனே பக்கத்தில் உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் டிற்கு சென்றார் மீனாவின் அப்பா. ஆஸ்பத்திரிக்கு போகணும்பா ஆட்டோ வரீங்களா? கொஞ்சம் சீக்கிரம் வாங்க, என்று சொல்லிக்கொண்டே உள்ளே குனிந்து பார்த்தார்.




அது ஒரு பெண் ஆட்டோ டிரைவர். ஐயோ பொம்பள டிரைவரா வேகமா ஓட்டுவீங்களா? ஆம்பள டிரைவரா இருந்தா ஸ்பீடா போவாங்க .சரி அவசரத்துக்கு என்ன செய்யறது? கொஞ்சம் சீக்கிரமா வாங்கமா என்று கூறி ஆட்டோவில் சுஜியும் டூவீலரில் இருந்து விழுந்தவரையும் ஏற்றி க்கொண்டு பக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு போகச் சொன்னார்கள். கூடவே ஓடி வந்து  சுஜியின் அப்பாவும் ஆட்டோவில் ஏறிக்கொண்டார். அம்மா சீக்கிரமா போமா என்றார் சுஜியின் அப்பா. 


சார் ரொம்ப வேகமாக ஓட்ட முடியாது . சரியான ஸ்பீட்லதான் போவேன். உங்களை சரியான நேரத்தில் பத்திரமாய் ஆஸ்பத்திரிக்கு கூட்டி செல்வது என்னுடைய பொறுப்பு. ஓவர் ஸ்பீடா போனா போலீஸ் பிடிக்கும் .உங்களுக்கும் தூக்கி தூக்கி போடும் என்றாள் ஆட்டோ டிரைவர் காவியா .இதுக்குதான் பொம்பள ஓட்டுற ஆட்டோல ஏறக்கூடாதுன்னு சொல்றது என்றார் சுஜியின் அப்பா. அப்பொழுது பின்னாலிருந்து ஆண் டிரைவர் ஒருவர் ஆட்டோவை வேகமாக ஓட்டிக் கொண்டு வந்து இவர்களை ஓவர் டேக் செய்து முன்னே சென்றார். சில நிமிடங்களில் அந்த ஆட்டோ கண்ணில் படாமல் மறைந்து விட்டது. 


பின்னால் வந்த இவர்கள் ஆட்டோ, ட்ராபிக்கில் வரிசையில் பின்னால் நின்றது .ஆட்டோவில் இருந்தவர்கள் பதட்டத்துடன் இருந்தார்கள் .சிறிது நேரத்தில் வண்டிகள் செல்ல ஆரம்பித்தது. ஆட்டோவும் ஆஸ்பத்திரியின் அருகில் சென்று கொண்டிருந்தது. அங்கே ஒரு ஆட்டோ ஓரங்கட்டி நின்றது. போலீஸ்காரர்கள் விசாரித்துக் கொண்டிருந்தார்கள். கிட்ட வந்து பார்க்கும்போது இவர்களை ஓவர் டேக் செய்து, சென்ற ஆட்டோதான் அது .அந்த டிரைவர் வேகமாக சென்றதால் அவர்களை போலீஸ் பிடித்து விசாரித்துக் கொண்டிருந்தார்கள். பைன் கட்ட சொன்னார்கள். லைசென்ஸ் வாங்கி கொண்டு பேசிக் கொண்டிருந்தார்கள்.


ஆஸ்பத்திரி வந்தவுடன் சுஜியின் அப்பாவும் ,மீனாவின் அப்பாவும் அடிபட்டவர்களை உள்ளே அழைத்துச் சென்று ஆஸ்பத்திரியில் அட்மிஷன் செய்தார்கள் .கொஞ்ச நேரத்தில் சுஜிக்கு நினைவில் திரும்பியது. டூவீலரில் வந்தவருக்கும் வைத்தியம் செய்யப்பட்டது. சரியான நேரத்தில் வந்ததால் பெரிய ஆபத்திலிருந்து சுஜி தப்பினாள் என்று டாக்டர் சொன்னார். உடனே சுஜியின்  அப்பா வெளியே வந்து பார்த்தார் .அங்கே ஆட்டோவில் உட்கார்ந்தபடியே உள்ளேயே பார்த்துக் கொண்டிருந்தாள் அந்த பெண் டிரைவர் காவியா. அவளைப் பார்த்து ரொம்ப தேங்க்ஸ் என்றார் சுஜியின் அப்பா.


ஏன் சார் ? ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா.. எல்லா சமயங்களிலும் ஒரே மாதிரி இருக்க முடியாது எங்களுக்கும் கோபம் வரும் .எல்லா துறைகளிலும் பெண்கள் முன்னேறி வர்றாங்க விண்வெளிக்கே ராக்கெட்டில் பெண்கள் செல்லும் காலம் இது. பெண்களை தரக்குறைவாக  பேசாதீங்க என்றாள் காவியா.


சாரிங்க, என்றார் மீனாவின் அப்பா.. பிறகு.. "மகளிர் தின வாழ்த்துக்கள்" என்று கூறினார். இன்னைக்கு ஒரு நாள் மட்டும் தான் சொல்லுவீங்க. வருஷம் பூரா எல்லா பெண்களும் குடும்பத்துக்காகவும் சமூகத்திற்காகவும் உழைத்துக் கொண்டுதான் இருக்காங்க அவர்கள் இல்லையென்றால், உலகமே இயங்காது என்றாள் பெண் டிரைவர் காவியா.


ஆமாம் ,நீங்கள் சொல்வது உண்மைதான் .தினமும் மகளிரை உயர்வாக சொல்லவில்லை என்றாலும் வருடத்தில் ஒரு நாள் ஆவது அவர்களுக்கு மரியாதை தந்தது வாழ்த்து சொல்லி பெண்களை போற்றுவோம். இனி வரும் காலங்களில் உங்கள் சேவை தொடரட்டும் என்றார் மீனாவின் அப்பா. அவள் சிரித்தபடியே நன்றி சொல்லிவிட்டு ஆட்டோவை திருப்பினாள்.


(எம் .எல்.பிரபா, சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. தமிழ்நாடு நியூஸ் பேப்பர், பேப்பர் பாய், பன்முகம், மலர்வனம், விருட்சம், நான் போன்ற மின் இதழ்களில் சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவைகளும், தமிழ்நாடு நியூஸ் பேப்பரில் 'மாயக்கண்ணன் லீலை' என்ற தொடரும் எழுதியுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!

news

செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்

news

"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி

news

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை

news

பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?

news

"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"

news

short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!

news

சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!

news

Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்