சுகம் தரும் சுற்றுச் சூழல்.. மாசு நீங்கிடும் மனதும் தெளியும்!

Su.tha Arivalagan
May 30, 2026,02:38 PM IST

- முனைவர் கோ. லதா


தென்றல் வீசிடும் தோப்பினில் மகிழ்வோம்

மரங்கள் செழித்து மலர்கள் பூக்கும்

நீரோடை ஓடும் நிலங்கள் வாழும்

பசுமை நிறைந்த பூமியை வணங்குவோம்


காற்று தூய்மையாய் காணும் இடமெல்லாம்

மழை பொழியும் மழைச்சாரல் குளிரும்

பறவை பாடிடும் புன்னகை பூக்கும்

வண்டு முரலும் வனத்தின் நடுவே




மாசு நீங்கிடும் மனதும் தெளியும்

நோய்கள் அகலும் நலமே தங்கும்

மூச்சு நிறைந்த முற்றம் சிறக்கும் 

உடல் வலிமை உறங்காது நிற்கும் 


வீடு தூய்மையாய் விளங்கிட வேண்டும்

சுற்றம் சூழ்ந்த சுகந்தம் நிறையும்

இயற்கை அன்னை இனிதாய் காப்பாள் 

நம்மை காக்கும் நாளெல்லாம் வாழ்வோம்


(பாரத் சேவா ரத்னா. முனைவர்.கோ. லதா, கல்வித் தூதர், மரபுப் பாவலர், எழுத்தாளர், தமிழக அரசின் மாநில நல்லாசிரியர் விருதாளர், சென்னை)