மொழியினில் வளம் கொள்...!
May 29, 2026,10:57 AM IST
- முனைவர் கோ. லதா
தமிழ்தாய் வளர்த்த செல்வம் மொழியே
தரணியில் உயர்ந்த தனிப்பெரும் பொழிலே
சொல்லின் வளத்தால் சோர்வை நீக்கு
சுடராய் வாழ்வில் சுகத்தை ஊட்டு
இலக்கணம் காத்து இனிமை சேர்.
இலக்கியம் படித்து ஏற்றம் பெறு
கவிதை பாடிக் களிப்பை வளர்
கருத்தை விதைத்துக் கடமை செய்
பழந்தமிழ் சொல்லை பண்பாய் நேசி
புதுமை சேர்த்து புகழைத் தேடு
நூலை படித்து நன்மை கொள்,
நுவழும் சொல்லால் நோயை வெல்
மொழியின் ஆற்றல் முழுமை கொள்க
வாழ்வில் தமிழை வாழ்த்தி வாழ்
(பாரத் சேவா ரத்னா. டாக்டர். கோ. லதா, கல்வித் தூதர், பன்முக உலக சாதனையாளர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதாளர், சென்னை)