கல்வி சுற்றுலாவிற்கு தனது குழந்தைகளை அனுப்பலாமா? வேண்டாமா?

Su.tha Arivalagan
Apr 04, 2026,12:04 PM IST

- மயிலாடுதுறை த.சுகந்தி, M.Sc,B.Ed


கல்வி சுற்றுலாவிற்கு தனது குழந்தைகளை அனுப்பலாமா? வேண்டாமா ? இந்த சந்தேகத்தில் இருக்கும் பெற்றோர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு. வாங்க தெரிந்து கொள்வோம் .


கல்வி சுற்றுலா அவசியம் என்பதை உணர்த்துவதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் தங்களது மாணவர்களை அழைத்துக் கொண்டு சுற்றுலா அழைத்துச் செல்வதை பார்க்க முடிகிறது. இதிலிருந்து நாம் குழந்தைகளுக்கு பல நல்ல இடங்களை சுற்றிக் காட்ட வேண்டும் என்பதை கற்றுக் கொள்ள வேண்டும். 


பள்ளி சுற்றுலா (School Tour) என்பது பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களுடன் சேர்ந்து அருங்காட்சியகம் வரலாற்று இடங்கள் பூங்கா , வனவிலங்கு சரணாலயம், தொழிற்சாலை ,அறிவியல் மையம் போன்ற இடங்களுக்கு சென்று நேரடியாக கற்றுக்கொள்வதே பள்ளி சுற்றுலா ஆகும்.


சில பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சுற்றுலா செல்ல அனுமதி அளிப்பதில்லை. தனது குழந்தைகளை நன்றாக கவனித்துக் கொள்வார்களா? என்றும், தனது குழந்தை அங்கு சென்று ஏதேனும் குறும்புத்தனம் செய்வானோ? என்ற சந்தேகத்தால் அனுப்புவதில்லை.




இப்படி குழந்தைகளை ஆசிரியருடன் சுற்றுலாவிற்கு அனுப்பாமல் இருப்பது முற்றிலும் தவறாகும். ஒவ்வொரு ஆசிரியரும் குழந்தைகளின் இரண்டாவது பெற்றோர் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். பெற்றோர்களுக்கு தங்களது  பிள்ளைகள்  மட்டும் தான் முக்கியம் என்று கருதுவார்கள்.ஆனால் ஆசிரியர்கள் அனைத்து குழந்தைகளையும் தனது குழந்தையாகவே கருதுவார்கள்.


ஆசிரியர் பணி ஓர் அறப்பணி என்பதை உணர்ந்து அவர்கள் அனைத்து குழந்தைகளையும் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வார்கள் என்பதை உணர வேண்டும். தனது குழந்தைகளுக்கு படிப்பை மட்டும் கற்றுக் கொடுப்பது மட்டும் நோக்கம் அல்ல .அதையும் தாண்டி ஒரு சமுதாயத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதை பழக வாய்ப்பு அளிக்க வேண்டும்.


அனைத்து குழந்தைகளுடன் அவர்கள் சேர்ந்து விளையாடுவதையும், தனது பெற்றோரை விட்டு தனியாக ஆசிரியருடன் செல்வதையும் நாம் அவசியம் ஆதரிக்க வேண்டும். அனுபவக் கற்றல் (Practical Learning) என்பது

புத்தகத்தில் படித்ததை நாம் நேரில் பார்க்கும் போது அவற்றின் பயன்களை அறிய முடிகிறது .


நேரடியாக நாம் சுற்றுலாவின் மூலம் பார்ப்பதை ஆசிரியர்கள் விளக்கும் பொழுது நாம் தெளிவாக கற்றுக் கொள்ள முடிகிறது. புதிய இடத்திற்கு சுற்றுலா  நாம் செல்லும் பொழுது அங்கு வரும் மேலைநாட்டினரையும் , அவர்களின் கலாச்சாரம் போன்றவற்றையும் தெரிந்து கொள்ள உதவுகிறது.


மாணவர்கள் ஒருவருடன் ஒருவர் பழகி குழு பணியில் ஈடுபட கற்றுக்கொள்கிறார்கள்.  ஒருவருக்கொருவர் தங்களது உணவுப் பொருட்களை பரிமாற்றம் செய்து கொண்டும், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து விளையாடுவதையும் பார்க்க முடிகிறது.


மாணவர்களுக்கு தங்கள் மேல் தானாகவே  தன்னம்பிக்கை வருகிறதை உணர முடிகிறது. படிப்பு படிப்பு என்று இல்லாமல் அவர்கள் மன அழுத்தத்தில் இருந்து  விடுதலைப் பெறுவதற்கும், அவர்கள் ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக கழிக்கவும் முடிகிறது .


நண்பர்களுடன் அவர்கள் சென்று வந்த சுற்றுலா  நல்ல நினைவுகள் உருவாக்கிறது. இனிமேல் அவசியம் உங்கள் குழந்தைகளை கல்வி சுற்றுலாவுக்கு  அனுப்புங்கள்.


(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேர்ந்தவர். அருள் தமிழ் இலக்கியம், மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள்  போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தில்  தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்)