கண்டிக்கா பிள்ளை கெடும் கடன்பட்டால் வாழ்வு கெடும் - ஔவையின் பொன்மொழி 60 (6)

Su.tha Arivalagan
Oct 21, 2026,11:24 AM IST

- கவிக்கடல் அ.ல.ஏகலைவன்


நேரிசை வெண்பாவில் அவ்வையின் 60 ஆத்தி சூடி மொழிகளை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். கவிக்கடல் அ.ல.ஏகலைவன் தொகுத்துத் தருகிறார். இன்று நாம் மேலும் இரு அருமையான மொழிகளைப் பார்த்து மகிழவுள்ளோம்.


பெற்றெடுத்த பிள்ளையைப் பேணி வளர்த்திடல்

உற்றவழி கையெடுத்தே ஒற்றுணர்ந்து- அற்றறிவால்

தண்டியாது தப்பும் தழைத்தே வளர்ந்திடும்

கண்டிக்கா பிள்ளை கெடும்


விளக்கவுரை




பாசத்தால் பேணி வரளர்க்கும் பிள்ளையை ;நல்வழியாக்க கண்டித்து வளர்க்க வேண்டும் ;

இல்லையெனில் பிள்ளையின் குணம் கெடும். 


--


உழைப்பால் வருந்நிதி உன்னத வாழ்வில்

மழைபோல் பொலிவூட்டும் மாண்பு- விழைந்திதை

உடன்பட்டே ஆனந்த ஊஞ்சலின்பம் காண

கடன்பட்டால் வாழ்வு கெடும்


விளக்கவுரை


உழைத்து வரும் செல்வத்தில் மழை போல் மகிழ்ச்சி நிலவும். அதற்காக கடன் பட்டால் ;அந்த வாழ்வும் கெடும்.


(மதிப்புறுமுனைவர் கவிக்கடல் அ.ல.ஏகலைவன், கிராம நூலகர், பிடாகம் ஊராட்சி, எலவனாசூர்கோட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டம்)