நாடாத நட்பும் கெடும்.. ஔவையின் பொன்மொழி 60

Oct 16, 2026,05:18 PM IST

- கவிக்கடல் அ.ல.ஏகலைவன்


நேரிசை வெண்பாவில் அவ்வையின் 60 ஆத்தி சூடி மொழிகளை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். கவிக்கடல் அ.ல.ஏகலைவன் தொகுத்துத் தரும் ஆத்தி சூடி மொழிகளில் இன்று அடுத்த இரு பாடல்களைப் பார்க்கலாம்.


தேடாத செல்வம் திரளாது கேளீரே

பாடாத பண்ணும் படராது- மேடாக்க

வாடாதோர் உள்ளம் வறுமையுறும் சான்றோரை

நாடாத நட்பும் கெடும்


விளக்கவுரை:




ஒருவரது வறுமையைக் கண்டு வாடாத உள்ளமும் தேடிச் செல்லாத செல்வமும் பாடி புரியாத கவியும் ;அதுபோல சான்றோரை நாடாத நட்பும் கெடும்.


மென்சொல்லே நன்மைதரும் மேன்மையின் நல்லுரை

அன்னவரின் ஆற்றொழுக்கே அன்புரை- நன்மை

தயவுடை உள்ளத்துள் தானெழும் சொல்லுள்

நயமில்லா சொல்லும் கெடும்


விளக்கவுரை:


மென்மையான சொல்லி நன்மை தரும் மேன்மையாகும் அவ்ஒழுக்கமே நன்மை தரும் ;தயவான இவ்வுள்ளத்துள் நயமில்லாத சொல்லும் கேட்டைத் தரும்.


(மதிப்புறுமுனைவர் கவிக்கடல் அ.ல.ஏகலைவன், கிராம நூலகர், பிடாகம் ஊராட்சி, எலவனாசூர்கோட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்