அச்சத்தால் வீரம் கெடும்.. அறிவற்றார் ஆக்கம் கெடும்.. ஔவையின் பொன்மொழி 60 (9)
- கவிக்கடல் அ.ல.ஏகலைவன்
கவிக்கடல் அ.ல.ஏகலைவன் எழுதி வரும் அவ்வையின் ஆத்திசூடி 60 தொடரில் இன்று மேலும் இரு மொழிகளைப் பார்க்கப் போகிறோம்.
அச்சமுறும் கேடர்கள் ஆக்கம் அறியாரே
இச்சமூகக் கேடும் இவர்களே - எச்சமிவரை
துச்சமென தூரயிடல் ஏற்நிரையாம் துட்டரின்
அச்சத்தால் வீரம் கெடும்
விளக்கவுரை
அச்சத்தைக் கொள்வோரால் எக்காரியமும் ஆகாது; இவர்களே சமூகத்தின் கேடர்கள்; துச்சமென இவரை தூர எறிதல் நன்மை. ஏனெனில் அச்சத்தால் வீரமும் கெடும்.
--
ஆன்றோரும் சான்றோரும் ஆற்றல் அறிவுடையார்
வான்மறை வள்ளுவம்போல் வாழ்வறிவார் - பான்மை
குறியிழந்தோர் வாய்ப்புகள் கூடாதாம் என்றும்
அறிவற்றார் ஆக்கம் கெடும்
விளக்கவுரை
அறிவுடைய சான்றோரும் ஆன்றோரும் ஆற்றல் பெறுவார்; வள்ளுவன்போல் மேன்மை உருவார்; இப்பண்பின் குறியிழந்தோர் வாய்ப்புகள் கூடாதாம்; ஏனெனில் அறிவற்றார் ஆக்கம் கெடுமாம்.
(மதிப்புறுமுனைவர் கவிக்கடல் அ.ல.ஏகலைவன், கிராம நூலகர், பிடாகம் ஊராட்சி, எலவனாசூர்கோட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டம்)