ஏக்கம் என்பது..!
- க.யாஸ்மின் சிராஜீதீன்
ஏக்கம் என்பது ஆசையின் விளைவுதான்
சக்தி வாய்ந்த உணர்வுதான்
மனித வாழ்க்கையில் இழையோடும்தான்......
விரும்பும் ஒன்று நம்மைச் சேரா நிலையில்
எட்டிப்பார்க்கும்தான்..
பசி உணவின் மீது ஏக்கம் கொள்ளச்செய்யுமே....
கல்வி,செல்வம், அடிப்படைத் தேவை
ஆடம்பரம் என நம்மை அழைத்துச் செல்லுமே......
இனிய நினைவுகள் பின்னோக்கி ஏக்கம் கொள்ளுமே......
எதிர்காலக் கனவுகள் முன்னோக்கி
ஏக்கம் கொள்ளுமே....
நம் சக்திக்கு ஏற்ற ஏக்கம்
நம்கையில்ஆனந்தமாய் தவழுமே.......
அளவுக்கு மீறினால் நம்மை வாட்டுமே ....
இயன்றவரை முயன்று வென்றிடு
ஏக்கம் நிறைந்த உலகம்தான்
அதிலே மனித வாழ்கைதான்....
காலம் கனிந்தால் அனைத்துமே
உன்னை வந்துச் சேருமே......
உழைப்பு தொடர்ந்து உழைத்திடு....
எண்ணிய நிலைக்கு உயர்ந்திடு....
மகிழ்ச்சியை அள்ளிப்பருகிடு
வாழ்கையை வசந்தமாய் ஆக்கிடு...!!!!
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)