எங்கே என் சொந்தம்?

Su.tha Arivalagan
Dec 10, 2025,03:57 PM IST

- J லீலாவதி


செல்வந்தர் ஒருவர் தன் ஒரே மகனான மணியை அன்புடனும் பாசத்துடனும் ஒழுக்கத்துடனும் கண்டிப்புடனும் வளர்த்து வந்தார்.

அவர் வளர்ப்பை போலவே மணியும் வளர்ந்து வந்தான். மணிக்கு 12 வயது ஆகிவிட்டது. அவனை பிடிக்காதவர்கள் யாரும் இல்லை எல்லோரிடத்திலும் மரியாதை உடன் நடந்து கொள்வான் பாசமோடு இருப்பான்.


பள்ளி விடுமுறை என்பதால் அவனுடைய நண்பர்கள் எல்லோரும் ஏ மணி நான் எங்க தாத்தா பாட்டி வீட்டுக்கு போறோம் அத்தை வீட்டுக்கு போறோம் சித்தி வீட்டுக்கு போறோம் என்றெல்லாம் நண்பர்கள் கூறிக் கொண்டிருந்தார்கள் மணிக்கு மிகவும் கவலையாக இருந்தது.




பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த மணியின் முகத்தில் வாட்டத்தை பார்த்த தந்தைக்கு இதற்கு முன் தன் மகனை இப்படி பார்த்ததே இல்லையே என்னவாக இருக்கும் என்று அவருக்குள் ஒரு கேள்வி. இரவு உணவு அருந்த அம்மா அப்பா மணி மூவரும் அமர்ந்திருந்த வேலையில் தன் மகன் எதையோ யோசிப்பதை கண்ட அவனின் அப்பா ஏ மணி என்ன ஆச்சு ஏன் இப்படி எதையோ இழந்த மாதிரி இருக்கு பள்ளிக்கூடத்தில் ஏதாவது பிரச்சனையா நண்பர்கள் இடத்தில் ஏதாவது சண்டையா என்று கேட்டுக்கொண்டே போனார்.

இல்லை சாதாரணமான ஒரு பதில் இதைக் கேட்ட அம்மா அப்பா இருவருக்கும் மகனை புதிதாக பார்ப்பது போல் உணர்ந்தனர்.

மணியன் அம்மா மெல்ல மணியின் அருகில் வந்து மணியின் தலையை கோதி தம்பி என்ன பிரச்சனை எதுவாக இருந்தாலும் எங்களிடம் கூறு என்று கூறினார்.


மணியின் கண்களில் நீர் இதை பார்த்ததும் மணியின் அப்பாவிற்கு உசுரே போய்விடும் போல இருந்தது. என்ன நடந்தது எதுவாக இருந்தாலும் பயப்படாமல் சொல் நாங்கள் இருக்கிறோம் என்றார் மணியின் அப்பா. மணி மெல்ல பேச தொடங்கினான்.


அம்மா நமக்கு சொந்தம் என்று யாரும் இல்லையா தாத்தா பாட்டி கூடவா இல்லை. என் நண்பர்கள் எல்லோரும் லீவுல அவங்க சொந்தக்காரங்க வீட்டுக்கு போயிட்டாங்க. நான் மட்டும் எங்கேயும் போறது கிடையாது ஏன் என்று கேட்டான்.


இதுதான் உன் கவலையா உனக்கும் தாத்தா பாட்டி இருக்காங்க. நாளையே உன்னை அவர்களிடம் கூட்டி செல்கிறேன்.க வலைப்படாமல் சாப்பிட்டு விட்டு தூங்கு என்றார். இதைக் கேட்டதும் மணிக்கு சந்தோசம் தாங்கவில்லை, என்ன எனக்கும் தாத்தா பாட்டி இருக்காங்களா எங்க இருக்காங்க, ஏன் இத்தனை நாட்களாக என்னை பார்க்க வரல, நாமும் ஏன் இதுவரை அவர்களை பார்க்க சென்றதில்லை மிகவும் கவலையுடன் கேட்டான்.


வேறு வழி இல்லாமல், நாளை உன்னை அழைத்துச் செல்கிறேன் இப்பொழுது போய் தூங்கு என்று சொல்லிவிட்டு அவரும் உறங்கச் சென்று விட்டார்.


விடியும் வரை உறக்கம் இல்லாமல் தாத்தா பாட்டியை பார்க்க போவதை நினைத்து முழித்துக் கொண்டே இருந்தான். விடிந்தது. மிகவும் உற்சாகத்துடன் இருந்தான். மூவரும் காரில் ஏறி தாத்தா பாட்டி பார்க்க கிளம்பினார்கள். நெடு நேரத்திற்கு பிறகு மணி உன் தாத்தா பாட்டி இருக்கும் இடத்திற்கு வந்து விட்டோம் இறங்கு என்றார் ஆவலுடன் துள்ளி குதித்து இறங்கிய மணிக்கு பெரிய அதிர்ச்சி அப்படியே நின்று விட்டான்


அது ஒரு முதியோர் இல்லம் இதை அவன் எதிர்பார்க்கவில்லை. உடனே அப்பாவிடம் நம்ம எங்க வந்து இருக்கோம் இங்கு எதுக்கு என்னை கூட்டிட்டு வந்து இருக்கீங்க இங்கே யார் இருக்கா என்றான்.


மணி உன் தாத்தா பாட்டி இங்கதான் இருக்காங்க பேசாமல் உள்ள வா என்று அவனை அழைத்துக் கொண்டு உள்ளே போனார் .

உள்ளே சென்ற மணிக்கு இதில் யார் நம் தாத்தா பாட்டி யோசித்தவரே நடந்தான்.


அவன் பார்த்த ஒவ்வொரு முதியோர் கண்களிலும் ஒரு ஏக்கம் தவிப்பு எதிர்பார்ப்பு தெரிந்தது அவனுக்கு கவலை தாங்க முடியவில்லை. மணி அங்க பாரு அந்த கருப்பு நிற சட்டை அணிந்து இருப்பவர் உன் தாத்தா அந்த பக்கம் சிவப்பு நிற புடவை உன் பாட்டி என்று சொன்னார்.


இதைக் கேட்டதும் மணி ஓடிப் போய் அவர்கள் இருவரையும் மாறி மாறி கட்டி தழுவி அழுதான். பேரனை பார்த்து சந்தோஷத்தில் அவ்விருவருக்கும் வார்த்தையே வரவில்லை கூடவே அவ்விருவரும் அழுதனர். சிறிது நேரத்திற்கு பிறகு மணி வா போகலாம் என்று அப்பாவின் குரல். முடியாது இவங்கள விட்டு என்னால வர முடியாது வந்தால் இவர்கள் இருவரையும் அழைத்து தான் வருவேன். இல்லையென்றால் நான் வரமாட்டேன்.


முடியாது இவங்கள வச்சு பாக்க முடியாம தான் இங்க கொண்டு வந்து விட்டிருக்கோம். இவங்கள இங்க நல்லா பாத்துப்பாங்க. இவங்க இங்க சந்தோஷமா தான் இருக்காங்க. நீ வா போகலாம் என்று கையை பிடித்து இழுத்தார் மணியின் அப்பா.

கையை விடுங்கள் ஏன் இவங்க என்ன தப்பு பண்ணாங்க எதற்காக இங்கு கொண்டு வந்து விட்டு இருக்கீங்க அந்த வீடு சொத்து எல்லாம் இவர்களுடையது அதெல்லாம் வேண்டும் இவர்கள் வேண்டாமா?


இதற்கு மேல் இவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன் நாளை உங்களுக்கு வயதானால் யோசித்துப் பாருங்கள் என்னை வளர்க்க நீங்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள் அதேபோல்தான் இவர்களும் இருந்திருப்பார்கள் நாளை அந்த நிலைமை உங்களுக்கு வர நான் விடுவேனா என்றதும் தன் தவறை உணர்ந்த மணியின் அப்பாவும் அம்மாவும் அவர்களுடைய கால்களில் விழுந்து தங்களை மன்னிக்கும் படியும் தங்களுடன் வரும்படியும் கேட்டனர்.


மணிக்கு மிகவும் சந்தோசம். இழந்ததை மீட்டுக் கொடுத்த இன்பத்தில் மணியின் தாத்தாவும் பாட்டி இருவருக்கும் கண்களில் ஆனந்தக் கண்ணீர் தன் பேரனை கட்டி அணைத்து கொண்டனர். உடனே மணி உள்ளே ஓடிச்சென்று எங்கிருக்கும் மற்றவர்களின் முகவரியையும் சேகரித்து உங்களையும் விரைவில் அழைத்துச் செல்ல உங்கள் உறவினர்களையும் அழைத்து வருவேன் என்று கூறி மிகவும் உற்சாகத்துடன் அங்கிருந்து எதையோ சாதித்ததை போல் தாத்தா பாட்டி இருவரின் கைகளையும் பிடித்து அழைத்து நடந்தான்.


(J லீலாவதி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து 

நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)