என்னுள் உறைந்தவன்!
- டிலாணி ஸ்ரீதரன்
மலைநாட்டின் இச்சையான பச்சை நிற பவளமவன்,
மழைக்காலத்தில் இடைவெளி விடாத சோம பானமவன்,
விடியலில் விழித் திறக்க
இதழையும் சுவைத்திடுவான்,
விடியாத இரவைக் கடத்த
நுதலையும் வருட தூண்டிடுவான்,
தாகம் தீர்த்து மோகத் தீயைக் கூட்டிடுவான்,
பாகம் அனைத்தையும் சுறுசுறுப்பாக ஆக்கிடுவான்,
வேகம் கொடுத்து
தேவையற்றவைகளை தட்டிச் சென்றிடுவான்,
விவேகமாய் விண்ணிற்குச் சென்றும் நடைபழகிடுவான்,
மலையகத்தில் என்றும் மங்காத ஒளியவன்,
விலைமதிப்பில் இன்றும் வீர நடை போடுபவன்,
காற்றுடன் நாணலாய் அசைகையிலே காதலும் மொழியுவான்,
சேற்றுடன் இருப்பவருக்கும்
சேர்ந்தே உடலை பொலிவுற செய்திடுவான்,
உதிரத்தில் உறைந்து நரம்புகளையும் முறுக்கேற்றுவான்,
அதிமதுரமாய் ஆட்கொண்டு சரீரத்தையும் மெருகேற்றுவான்,
உன்னில் என்னில் உருமாறி உறைந்தவன் ,
உலகமே தேடும் உண்மையின் உணர்வு அவன்,
உற்சாகத்தை உரைக்கும் உளவியலின் உயிரவன்,
உறக்கத்தை தழுவும் இமைகளின் மெய்க்காவலன்,
யாவரையும் காக்கும் பெருமையற்ற சிறுமையவன்,
யாரவன்??? யாரவன்???
தெய்வீக பிறப்பவன்....!
"தேநீருடன்"..... டிலாணி ஸ்ரீதரன்!