மனிதன் மாறி விட்டான்.. ஆனால் தொன்மை மாறலையே!

Su.tha Arivalagan
Nov 20, 2026,03:55 PM IST

- ஈரோடு மாலதி


ஆதிகாலத்தில் மனிதர்களின் வாழ்க்கை முறை மிகவும் எளிமையாகவும், இயற்கை சார்ந்ததாகவும் இருந்தது. 


அன்றைய காலத்தில் மனிதர்கள் விவசாயம் பற்றி அறியாமல், வேட்டையாடுதலையும் காடுகளில் கிடைக்கும் காய்கறிகள், பழங்கள், கிழங்குகளைச் சேகரித்து உண்பதையும் மட்டுமே நம்பியிருந்தனர். 


நிரந்தர வீடுகள் எதுவும் கிடையாது. காட்டு விலங்குகளிடமிருந்தும் இயற்கையின் சீற்றத்திலிருந்தும் தப்பிக்கக் குகைகளிலும், பெரிய மரங்களின் நிழல்களிலும் வாழ்ந்தனர். 


விலங்குகளின் தோல்கள், மரப்பட்டைகள் மற்றும் இலைகளை மட்டுமே தங்கள் உடலை மறைக்கப் பயன்படுத்தினர். 


கற்களை உரசி நெருப்பை உருவாக்கக் கற்றுக்கொண்டது மனிதகுல வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இது சமைத்த உணவை உண்ணவும், குளிர்காலங்களில் வெப்பம் காக்கவும் பெரிதும் உதவியது. 




கற்கள், எலும்புகள் மற்றும் மரக்கட்டைகளைக் கொண்டு செய்யப்பட்ட கூர்மையான ஆயுதங்களே வேட்டையாடுவதற்கும் பாதுகாப்பிற்கும் உதவின. 


காலங்கள் மாறினாலும், மண்ணால் செய்யப்பட்ட மண்பானை மட்டும் இன்று வரை தன் சிறப்பை இழக்கவில்லை. ஏழாயிரம் ஆண்டுகள் கடந்தாலும், மண்பானையில் தண்ணீரைப் பாதுகாக்கும் முறை இன்றும் தனித்துவமாகவே உள்ளது. குளிர்சாதனப் பெட்டியில் (ஃப்ரிட்ஜ்) இருக்கும் நீரை விட, மண்பானையில் இருக்கும் நீர் இயற்கையான குளிர்ச்சியுடனும், அளப்பரிய ருசியுடனும் இருக்கும். இன்று வரை மறக்க முடியாத பாரம்பரியச் சின்னமாக மண்பானை திகழ்கிறது.


மனிதன் மாறி விட்டான் மரத்தில் ஏறி விட்டான் என்று ஒரு பாடல் உண்டு. மனிதன் மாறியிருந்தாலும் கூட அவனது பல தொன்மையான பழக்கங்கள் மாறவில்லை என்பது ஆரோக்கியமான விஷயம்தானே.


(கட்டுரையாளர் மாலதி, நசியனூர், நெசவாளர் காலனி, சிந்தன்கோட்டை, எம்ஜிஆர் ரோடு, ஈரோடு)