புரட்டாசி மாதம் விரதம் இருப்பதெல்லாம் சரி.. என்னெல்லாம் சாப்பிடலாம்.. இந்தா பிடிங்க லிஸ்ட்!

Su.tha Arivalagan
Sep 29, 2026,10:50 AM IST

- ஈரோடு மாலதி


புரட்டாசி மாதத்தில் பெருமாளை விரதமிருந்து வழிபடுபவர்களுக்காக ஒரு மாதத்திற்கான ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவு முறை வழிகாட்டி இதோ. முப்பது நாட்களுக்கு ஏற்ற வகையில் பலவிதமான பாரம்பரிய சமையல் குறிப்புகள் இதில் அடங்கியுள்ளன.


மதிய உணவிற்கு ஏற்ற சுவையான குழம்பு வகைகளில் வாழைப்பூ வறுத்த குழம்பு, அவரைக்காய் குழம்பு, முருங்கைக்காய் குழம்பு, காரசாரமான புளிக்குழம்பு மற்றும் வத்தக்குழம்பு ஆகியவை முதன்மையானவை. மேலும் சத்தான கீரை குழம்பு, வெண்டைக்காய் குழம்பு, கத்தரிக்காய் குழம்பு, பூசணிக்காய் குழம்பு, சுரைக்காய் குழம்பு, பீர்க்கங்காய் குழம்பு, தக்காளி குழம்பு மற்றும் மிளகு குழம்பு போன்றவற்றைச் சமைக்கலாம். 


தானியங்கள் மற்றும் கிழங்கு வகைகளைக் கொண்டு கொண்டைக்கடலை குழம்பு, கருப்பு உளுந்து குழம்பு, கொள்ளு குழம்பு, காய்கறி குழம்பு, உருளைக்கிழங்கு குழம்பு, சேனைக்கிழங்கு குழம்பு, முள்ளங்கி சாம்பார், அவரை ஆட்டி வைத்த குழம்பு, புடலங்காய் கடலைப்பருப்பு குழம்பு, கேரட் பீட்ரூட் குழம்பு, முருங்கைக் கீரை குழம்பு, மோர் குழம்பு, கருணைக்கிழங்கு குழம்பு, பருப்பு உருண்டை குழம்பு, பட்டாணி குழம்பு, மொச்சைக்கொட்டை குழம்பு மற்றும் பாசிப்பருப்பு குழம்பு என தினமும் ஒரு வகை குழம்பைச் செய்து அசத்தலாம்.




இரவு உணவிற்குத் தொட்டுக்கொள்ள சுவையான சட்னி வகைகளாக தேங்காய் சட்னி, பொட்டுக்கடலை சட்னி, புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி, பருப்பு சட்னி, தக்காளி சட்னி, நிலக்கடலை சட்னி, வாழைப்பூ சட்னி, முள்ளங்கி சட்னி, புடலங்காய் விதை சட்னி, பீர்க்கங்காய் தோல் சட்னி, கடலைப்பருப்பு சட்னி, பீட்ரூட் சட்னி, வெண்பூசணிக்காய் சட்னி, தக்காளி தொக்கு செய்யலாம்.


அது மட்டுமல்லாமல், கேரட் சட்னி, மிளகு தக்காளி சட்னி, இஞ்சி சட்னி, கருவேப்பிலை சட்னி, ஆந்திரா பச்சை மிளகாய் சட்னி, கேப்சிகம் சட்னி, கோவக்காய் சட்னி, புளிச்சக்கீரை சட்னி, வெள்ளரிக்காய் சட்னி, பச்சை தக்காளி சட்னி, பாம்பே சட்னி, மாங்காய் சட்னி, முருங்கை தொக்கு சட்னி, காரச் சட்னி மற்றும் காய்கறி சட்னி என ஏராளமான ஆரோக்கியமான சட்னி வகைகளைத் தயாரித்துச் சுவைக்கலாம்.


இவற்றுடன் தொட்டுக்கொள்ள சாதா தோசை, நெய் தோசை, ரவா தோசை, பொடி தோசை, பச்சைப்பயறு தோசை (பெசறட்டு), கேரட் தோசை, மசால் தோசை, கார தோசை, நவதானிய தோசை, மைசூர் மசால் தோசை, உருளைக்கிழங்கு பொடிமாஸ் தோசை, கருவேப்பிலை பொடி தோசை, பீட்ரூட் தோசை, தக்காளி தோசை, வெஜிடபிள் தோசை, கோதுமை தோசை, மைதா தோசை, ராகி தோசை, பால் தோசை, இனிப்பு தோசை, பன்னீர் மசாலா தோசை, முடக்கத்தான் இலை தோசை, மூலிகை தோசை, அடை தோசை, ராகி பக்கோடா தோசை, இஞ்சி தோசை, புதினா தோசை மற்றும் புளிச்சக்கீரை தோசை போன்ற பலவகை தோசைகளையும் செய்து மகிழலாம்.


பெருமாளுக்காக விரதம் இருந்து வழிபடுபவர்கள், இந்த ஆரோக்கியமான உணவுகளைச் சுவையாகச் சமைத்துச் சாப்பிட்டு, புரட்டாசி மாதத்தை ஆரோக்கியத்துடனும், சந்தோஷத்துடனும், நம்பிக்கையுடனும் கொண்டாடுங்கள்.


வாழ்க வளமுடன்!


ஜெய் ஸ்ரீ ராம்! ஜெய் ஸ்ரீ ராம்! ஜெய் ஸ்ரீ ராம்!


(கட்டுரையாளர் மாலதி, நசியனூர், நெசவாளர் காலனி, சிந்தன்கோட்டை, எம்ஜிஆர் ரோடு, ஈரோடு)