- தா. மணிமேகலை
விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் இன்று அடுத்த ஸ்லோகம் பார்க்கலாம்
ஸ்லோகம் 4
வ்யாஸாய விஷ்ணு ரூபாய வ்யாஸரூபாய
விஷ்ணுவே.
நமோ வை ப்3ரஹ்ம
நித4யே வாஸிஷ்டா2ய
நமோ நமஹ.
பொருள்:

வ்யாஸாய விஷ்ணு ரூபாய:
விஷ்ணுவின் வடிவமாக இருக்கும் வ்யாஸருக்கும்
வ்யாஸரூபாய விஷ்ணுவே:
வ்யாஸரின் வடிவமாக இருக்கும் மஹாவிஷ்ணுவிற்கும் நமஸ்காரம்
நமோ வை ப்3ரஹ்ம நித4 யே:
பிரம்ம ஞானத்தின் இருப்பிடமாக விளங்குபவருக்கு நமஸ்காரம்.
வாஸிஷ்டா2ய நமோ நமஹ.
வசிஷ்டர் மகரிஷி வம்சத்தில் பிறந்த அவருக்கு மீண்டும் மீண்டும் எனது நமஸ்காரங்கள்.
விளக்கம்:
விஷ்ணு வடிவுள்ள வியாஸராகவும், வ்யாஸர் வடிவுள்ள விஷ்ணுவாகவும்விளங்குவோராய் ஞானத்தாலும் தவத்தாலும் நிறைந்த நிதியாக வ்யாஸருக்கு நமஸ்காரம். விசிஷ்டர் மகரிஷி வம்சத்தில் வந்தவருக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம்.
வ்யாஸரும், மஹா விஷ்ணுவும் வேறல்ல, இருவரும் ஒன்றே என்று இந்த ஸ்லோகம் போற்றுகின்றது.
வ்யாஸ பூர்ணிமா (குரு பூர்ணிமா) போன்ற நன்னாளிலும், ஆன்மிகப் பாடங்களைத் தொடங்கும் போதும்
இந்த ஸ்லோகம் ஓதப்படுகிறது.
(தா. மணிமேகலை, பி.காம், திருச்சிராப்பள்ளி. அருள் சக்தி ஆலயம் குழுவில் பகவத்கீதை வகுப்பு எடுக்கிறார்)
அழகு தமிழ் ராகத்திலே ஆனந்தமாய் மெட்டு எடு அன்பாக மாமன் நெஞ்சம் அடியே நீ தொட்டுவிடு!
நான் நிரந்தரமானவன்.. திருச்சியில் அரங்கேறிய மரபுப் பா கவியரங்கம்!
கணினிக் கல்யாணி.. A Science சிறுகதை!
நவீன நல்லதங்காள்!
சப்த கன்னியர், சப்த மாதர்கள் இரண்டும் ஒன்றா?
Dorothy Quick Review: திருநங்கைகளை இனி பார்த்தால் வணங்க வேண்டும்..!
நல் வாழ்வியல் சிந்தனைகள்.. பாராட்டினால் மகிழ்ச்சி.. அறிவுரை என்றால் கசக்குது!
Tuesday Thoughts: அவர்களை விடுங்கள்! நிம்மதியாகப் போகட்டும்!
புரட்டாசி மாதம் விரதம் இருப்பதெல்லாம் சரி.. என்னெல்லாம் சாப்பிடலாம்.. இந்தா பிடிங்க லிஸ்ட்!
{{comments.comment}}