- தா. மணிமேகலை
வியாச முனிவர் தொகுத்தளித்த விஷ்ணு ஸஹஸரநாமத்தில் இன்று மூன்றாவது ஸ்லோகம் குறித்துப் பார்ப்போம்.
ஸ்லோகம் 3
வ்யாஸம்
வஸிஷ்ட2நப்தாரம்
ஷ2க்தே: பெளத்ரமகல்மஷம்
பராஷ2ராத்மஜம் வந்தே3
ஷு2கதாதம்
தபோநிதி4ம்.

பொருள்:
வ்யாஸம் - பகவான் வேத வியாசர்
வஸிஷ்ட நப்தாரம்- வசிஷ்ட முனிவரின் கொள்ளு பேரன்
ஷ2க்தே பௌத்ரம்- சக்தி முனிவரின் பேரன்
மகல்மஷம்- மாசற்ற
பராஷ2ராத்மஜம் - பராஷர முனிவரின் புத்திரர்
வந்தே- வணங்குகிறேன்
சுகதாதம் தபோநிதிம் - தவத்தின் இருப்பிடமாகவும் சுக முனிவரின் தந்தையாகவும் விளங்குபவரை
வணங்குகிறேன்
விளக்கம் :
வசிஷ்டருடைய கொள்ளு பேரனும் சக்தி முனிவர் என்பவருடையபேரனும் பராசரமுனிவருடைய புத்திரரும்
சுக பிரம்மமுனிவரின் தந்தையாகிய மாசற்றவராகிய வ்யாஸ முனிவரை வணங்குகிறேன்.
இந்த ஸ்லோகம் வ்யாஸ முனிவரின் பெருமையையும் அவரது தூய்மையான வம்ச ஆதிக்கத்தையும்
போற்றுகிறது.
வசிஷ்டர் முதல் வ்யாஸர் வரை உள்ள குரு பரம்பரையை வணங்குவதன் மூலம் நம் அறியாமை நீங்கும் என்பது ஐதீகம்
குருவே சரணம்
(தா. மணிமேகலை, பி.காம், திருச்சிராப்பள்ளி. அருள் சக்தி ஆலயம் குழுவில் பகவத்கீதை வகுப்பு எடுக்கிறார்)
தை பொறந்தது அத்தை அத்தை.. உந்தன் மடி என்றும் மெத்தை மெத்தை!
Santhi Sinnathambi Poem: வனவளம் காப்போம்!
விஷ்ணு ஸஹஸ்ரநாமம்.. 3வது ஸ்லோகம் சொல்வது என்ன?
என்னைப் பார் யோகம் வரும்.. கழுதைக்கும் யோகத்துக்கும் என்னங்க சம்பந்தம்?
தேர்தல் கமிஷனர் பதவி விலகாவிட்டால் அக்., 2 முதல் நாடு தழுவிய போராட்டம்: கரப்பான் ஜனதா கட்சி Warning!
தர்மத்தின் வழியில் நடக்கும் போது இறைவன் நிச்சயம் துணையாக இருப்பான்.. மகாபாரத ரகசியம்!
Puzzle: அந்தாதி வினா விடை.. வர்றீங்களா விளையாடலாம்?
செல்வம் பெற இப்பதிகம் பாடுக!
திருவாசகம்.. பதிகம் 1 .. இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் "தாள்"வாழ்க"!
{{comments.comment}}