தேடி வரும் தெய்வத்தின் அறிகுறி!

Su.tha Arivalagan
Nov 04, 2026,12:28 PM IST

- ஈரோடு மாலதி


எனக்கு தெய்வத்தின் அறிகுறி இருந்து கொண்டே இருக்கும். எப்படி என்றால், நான் ரொம்ப கஷ்டமாக இருக்கும்போதும் சரி, அல்லது சந்தோஷமாக இருக்கும்போது, தனிமையில் இருக்கும்போது, மனதில் ஏதாவது ஒரு ஆழமான சந்தேகம் இருக்கும்போதும் சரி... ஏதோ ஒரு விடை கிடைக்கும்.


அதற்கு உதாரணம்: நான் எங்காவது சென்று கொண்டிருந்தால், எனக்குப் பிடித்த எந்த தெய்வம் இருக்கோ, அந்த தெய்வம் காரிலோ, போட்டோவிலோ, ஏதோ ஒரு ரூபத்தில் எனக்குக் காட்டும்.


அடுத்ததாக, சிம்ம ராசி மகம் நட்சத்திரம் என்பதால், "அடிக்கடி சித்தர் கோவிலுக்குச் செல்ல வேண்டும்" என்று சொல்வார்கள். பழனி கணக்கம்பட்டி சித்தர் என்றால் மிகவும் பிரசித்தி பெற்றவர். இன்றும் 500, 1000 பேருக்கு அன்னதானம் நடந்து கொண்டிருக்கிறது. அவரைச் சுலபமாகப் பார்க்க முடியாது. ஏனென்றால், அந்தப் பாக்கியம் இருப்பவர் மட்டுமே பார்க்க முடியும் என்று சொல்வார்கள்.


இன்று நான் மிகவும் கோபமாகவும், விரக்தியின் உச்சக்கட்டத்திலும், வாழ்க்கையில் விழும் உச்சக்கட்டத்திலும் யோசித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது மழை இல்லை. ஆனால் ஒரு அழகான பட்டாம்பூச்சி என்னை தேடி வந்தது. இரவில் உட்கார்ந்து ஒரு 5 முதல் 10 நிமிடம் இருக்கும், அப்புறம் எங்கே போயிற்று என்று தெரியவில்லை. அந்த உணர்ச்சி என்னவென்றால், நான் ரொம்ப கஷ்டத்தில் இருந்தால் "நான் இருக்கிறேன்" என்று அந்த சித்தர் மூலம் எனக்குக் கூறியது போல இருந்தது. அது மிகவும் பெருமை தரும் விஷயம்.


அடுத்து ஒரு நாள் நான் எங்காவது வெளியே சென்றால், ஏதோ ஒரு தெய்வத்தை நினைத்துக் கொண்டிருந்தால் (இன்று கூட நடந்தது; சிவன் கோயிலுக்கு சனீஸ்வர பகவானுக்கு விளக்கு போட போயிருந்தேன். அப்பொழுது எழுச்சியாக சிவனைப் பார்த்து நோன்பு, தியானம் செய்துவிட்டு வந்தேன். வியாபாரமே ஆகவில்லை; என்னை போன் பண்ணி வரவழைத்து, 3000 ரூபாய்க்கு வியாபாரம் பண்ணினேன்).




அதே கஷ்ட காலங்களில் எனக்கு எப்படி உணர்த்தும் என்றால், நான் "அப்படி இருக்க வேண்டும், இப்படி இருக்க வேண்டும்" என்று யோசித்துக்கொண்டே இருப்பேன். ஒரு நாள் திருச்செந்தூர் போயிருந்தோம். 21 அலைகள் வரும். அப்போது ஒரு பெரிய அலை வரும், அதை கண்டுபிடிக்க முடியாது. ஒரு தடவை ஓங்கி அடித்து ஆட்களை இழுத்துச் சென்றுவிட்டது. அதில் பல பேர் பாதிக்கப்பட்டார்கள். அதில் காமெடியும் இருக்கிறது, பரிதாபமும் இருக்கிறது. கஷ்டமாக இருந்தது, அது இறைவனுடைய செயல்.


இரண்டு பெண்கள் கடற்கரையில் திருச்செந்தூரில் குளிக்கத் தெரியாமல் குளித்தார்கள். அலையானது ஒருவரை விரட்டித் தள்ளிவிட்டது. பாவம், அவர்கள் மூக்கெல்லாம் தலையெல்லாம் மண்ணாகிவிட்டது, வாந்தி எடுத்துவிட்டார்கள்.


அடுத்ததாக ஒரு தாத்தா குளிக்கச் சென்றவர், பாவம் கோமணம் கட்டியிருந்தார். கோமணம் அவிழ்ந்துவிட்டது. மானத்தைக் காப்பாற்ற முடியாமல் தவித்தார், எல்லோரும் வேடிக்கை பார்த்தார்கள். நான் என் பக்கத்தில் இருக்கும் சின்ன பசங்களிடம் (ஒரு 20 - 25 வயதிருக்கும்) "ஓடிச் சென்று துண்டை எடுத்து வர வேண்டும்" என்று கூறினேன். அப்புறம் எடுத்து வந்து கொடுத்தார்கள். ஆனால் அந்த தாத்தாவை அந்தச் சிறுவர்கள் அவமானப்படுத்திவிட்டார்கள், அவர்களுக்குத் தெரியவில்லை.


இது எதற்காகக் கூறுகிறேன் என்றால், அப்பொழுது கடற்கரையில் குளித்துவிட்டு இரவு முழுவதும் இருந்துவிட்டு, மிகவும் சந்தோஷமான நிலையில் வரும்போது ஆனந்தத்தின் உச்சக்கட்டத்தில் இருந்தேன். தெய்வத்தை மூன்று முறை பார்த்தேன், ஆறு வேளை பூஜையும் பார்த்தேன். நண்பர், தோழியோடு என் கணவரோடு சேர்ந்து ரொம்ப சந்தோஷப்பட்டிருந்தேன்.


ஆனால் எனக்கு டைம் சரியில்லை என்பதை முருகன் அந்த இடத்தில் பூரான் அல்லது பாச்சை மூலமாகக் காட்டுவார். தவறான விஷயம் ஏதாவது இருந்தால் எனக்கு அந்த ரூபத்தில் காட்டுவார். ஆபத்து ஏதும் இருந்தால், நான் போகும்போது ஏதோ ஒரு கெட்ட விஷயத்தை என்னிடம் காட்டுவார். நான் மனதில் பேசும்போது பல்லி சரி, தவறு என்று கூறும். நான் ஆழ்ந்து யோசித்து அழுதாலும் அல்லது சிரித்துக் கொண்டிருந்தாலும், அந்த விடை தெரியாமல் இருந்தால் அங்கே உணர்த்துவார்கள்.


அதேபோல பசுமாடு... நான் எங்காவது சென்றால் பைரவரையோ அல்லது பசுமாட்டையோ பார்க்க வைப்பார், அல்லது மயிலைப் பார்க்க வைப்பார். ஏதாவது புனிதமான அறிகுறிகளைக் காட்டுவார். தவறாக இருந்தால் தவறான அறிகுறிகளைக் காட்டுவார். நிறைய தடவை நான் சின்ன சின்ன விஷயங்களில் தப்பித்து இருக்கிறேன். எனக்கு ஏதாவது பெரிய அவமானம் ஏற்பட்டால், அந்த நேரத்தில் என்னை நிறைய முறை காப்பாற்றி இருக்கிறார். பல விஷயங்கள் செய்யும்போதெல்லாம் மிகப்பெரிய போராட்டத்தில் எல்லாம் என்னை காப்பாற்றி இருக்கிறாள்.


ஆன்மீகப் போராட்டத்தில், நான் தெய்வத்திற்காக ஒரு ஊருக்கு பூஜை ஓம் சக்தி அம்மனை எடுத்துச் செல்வோம். பல பிரச்சினைகள் வரும். அம்மனைத் தூக்கக்கூட யாரும் வரமாட்டார்கள். அம்மனுக்குச் சரியாக பூஜை சாமான்கள் வாங்கி வர மாட்டார்கள். எத்தனையோ பிரச்சனைகள் வந்துகொண்டிருக்கும் போதெல்லாம் எனக்கு அம்மன், சிவன், பெருமாள், விநாயகர், கிருஷ்ணர் ஒவ்வொரு உருவாக, ஒவ்வொரு ரூபத்திலும் என்னைக் காப்பாற்றி இருக்கிறார்கள்.


ஒரு நாள் விராலிமலையில் நாங்கள் கோவிலில் சாமி கும்பிட்டு வரும்போது, என்னுடைய பேக் பறிக்கப்பட்டது. அங்கு இருக்கும் குரங்கு எடுத்துச் சென்று மலைப்பகுதியில் காசு, பணம், என்னுடைய ஆதாரங்கள் எல்லாத்தையும் தூக்கி எறிந்துவிட்டது தனித்தனியாக. அதில் சாக்லேட் இருந்தது, அதை மட்டும் சாப்பிட்டுவிட்டு இருந்தது. எனக்கு அழுகை வந்துவிட்டது.


அப்பொழுது அங்கிருந்து ஐயர்கள் யாரும் சரியாக என்னிடம் பேச மாட்டார்கள், சிடுசிடு மூஞ்சியோடுதான் இருப்பார்கள். நான் ஆறு முகம் கொண்ட முருகனை அன்றுதான் பார்த்தேன். அந்த முருகனைப் பார்த்ததும் விளக்கம் கூறினார். பத்திரமாகச் செல்லவில்லை என்று எனக்குச் சொன்னார். இருந்தாலும் என் வேலை முடிந்துவிட்டது, பயந்துகொண்டே வந்துவிட்டேன்.


ஆனால் மறுகணமே இறைவனிடம் வேண்டினேன், "ஐயா, உன்னை முதல்முறையாக தெரியாத ஊருக்கு வந்து வணங்கி இருக்கிறேன். என்னை கண்ணீர் விட வைத்துவிட்டாயே, என்ன காரணம்?" என்று. கண்ணீர் வரும் முன்பே அங்கிருந்து ஒரு ஐயர் வந்தார். ஒரு நாலைந்து பசங்களை வரவைத்தார். அந்தச் சின்ன பசங்கள் (ஒரு 15 முதல் 20 வயதிற்குள் இருக்கும் ஆண் குழந்தைகள்) எட்டி குதித்தார்கள். என்னுடைய சாவி, மணி பர்ஸ், ஆதார் கார்டு அத்தனை பொருட்களையும் எடுத்து வந்தார்கள். பத்து நிமிடத்தில் கிடைத்துவிட்டது.


அப்பொழுது பூசாரி கூறினார், "உங்களுக்கு ஏதோ அதிர்ஷ்டம் இருக்கிறது. முருகன் துணை இருப்பதனால்தான் உங்களுக்கு எல்லாப் பொருளும் மீண்டும் கிடைத்துவிட்டது. வேறு யாருக்கும் அந்த குரங்கு கொடுக்காது, எங்கேயாவது கொண்டு போட்டுவிடும் அல்லது கடித்துவிடும். உங்களுக்கு ஏதாவது தெய்வ சக்தி இருக்கிறது" என்று கூறினார்கள். ஆனால் உண்மைதான், நிறைய இடங்களில் எனக்கு நிகழ்வுகள் நடந்திருக்கின்றன.


திருவண்ணாமலையில் ஒரு முறை... நான் தெய்வத்தை நேரில் பார்த்ததே இல்லை (மனித ரூபத்தில் பார்த்ததில்லை). திருவண்ணாமலைக்கு முதல்முறையாக சிவன் அடியார் குரூப்புக்காக அன்னதானம் போடச் சென்றிருந்தோம். ஒரு வேளைக்கு 25 பிடி சாதம், ஒரு பிடி 8 பேர் என்றால் 25 பிடி எத்தனை பேருக்கு என்று பாருங்கள்! நாங்கள் சேவை செய்யச் சென்றிருந்தோம்.


அப்பொழுது எனக்கு ஒரு சந்தேகம், "எத்தனையோ பேருக்குக் காட்சி அளித்திருக்கிறாய்... இந்தத் திருவண்ணாமலையில் என்னுடைய தெய்வம் நீ. ஏனென்றால் என்னுடைய பெயர் மாலதி. 'தி' என்றால் சக்தி, அந்த அக்னி. திருவண்ணாமலை அக்னி எனக்குரிய தெய்வம். ஜாதகப் பிரகாரம் நான் சூரிய பகவானுடைய மகள்" என்று தோன்றி எனக்கு ரொம்ப அழுகை வந்துவிட்டது. ரொம்ப சந்தோஷமாகவும் இருந்தேன்.


ஒரு நாள் கோவிலுக்குள் செல்லும்போது எல்லோரும் சென்றுவிட்டார்கள். தெலுங்கர்கள், கர்நாடகாகாரர்கள், ஆண்கள் அதிகமாக பஸ்ஸில் வந்துவிட்டார்கள். மாலை போட்டுவிட்டு நாங்கள் மூவர் மட்டும் சிவனுடைய பாதத்தைத் தொட்டு கும்பிட்டு வருவதற்குள் இரண்டு பஸ் உள்ளே நுழைந்துவிட்டது. என்ன செய்வது என்று தெரியவில்லை, பயமும் இருந்தது. அவர்களெல்லாம் முரட்டு ஆட்களாக இருந்தார்கள். "இவ்வளவு சோதனை கொடுக்கிறாயே" என்று நான் தெய்வத்துடன் அழுது வேண்டிக்கொண்டிருந்தேன்.


அப்பொழுது நான் அவர்களிடம் போராடினேன், "என்னை முன்னே விடுங்கள், குழந்தையும் பாட்டியும் நானும் தனியாக இருக்கிறோம், எங்களை விட்டுவிடுங்கள்" என்று. பஸ்ஸில் வந்த அனைவரும் திட்டிக்கொண்டே இருந்தார்கள். நான் என்ன செய்வது என்று தெரியவில்லை. "ஐயோ, மாட்டிக்கொண்டோமே! எப்படி தப்பித்து வெளியே வருவது?" என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன்.


அப்பொழுது கடவுளுடைய அருள் கிடைத்தது. ஈரோட்டில் இருந்து ஒரு பூசாரி வந்தார். "என்னம்மா ஆயிற்று?" என்று கேட்டார். வந்தவர், எனக்கு முன் வந்தவர்கள், என்னோடு வந்தவர்கள் எல்லாம் உள்ளே சென்றுவிட்டார்கள். முதல் படி, முதல் வாசலில் அதிர்ஷ்டசாலியாகச் சென்றுவிட்டார்கள். ஆனால் எனக்கும் அங்கிருந்த தெலுங்குகாரருக்கும் வாக்குவாதம் நடந்தது. நான் போட்டோ எடுத்து எங்கள் குரூப்புக்கு அனுப்பிவிட்டேன், "இப்படி ஆட்காரர்கள் என்னை மிகவும் சங்கடப்படுத்துகிறார்கள்" என்று சொன்னேன். உடனே அங்கிருந்து வந்த செக்யூரிட்டி கேட்டை ஓபன் செய்துவிட்டார். கேட்டை ஓபன் பண்ணியவுடன் எல்லோரும் பிரிந்துவிட்டோம், நான் மட்டும் மாட்டிக்கொண்டேன்.


அப்பொழுது அந்த குருக்கள் வந்தார்கள். "பூசாரி ஐயா, எப்படி செல்வது என்று தெரியவில்லை" என்று சொன்னேன். "வா மகளே" என்று கூறினார். "இங்கு நின்றால் ஐந்து கோபுரங்கள் தெரியும்" என்று கூறினார். பார்த்தேன், மிகவும் பாக்கியசாலி நான்! அத்தனை கண்ணீருடன், அத்தனை அவமானங்களுடனும் அந்த 60 பேருக்குப் பதில் எனக்குக் கிடைத்த பாக்கியம்—அந்த ஐந்து கோபுரத்தையும் ஒரே இடத்தில் நின்று பார்ப்பது. அது எனக்குத் தெரியாது, அவர் காட்டிவிட்டு மறைந்துவிட்டார். எங்கே சென்றார் என்று தெரியவில்லை.


மீண்டும் என்னைச் சுற்றிவர வைத்துவிட்டார்கள். அப்போதும் கொஞ்சம் மனம் கஷ்டப்பட்டது. "எப்படி சோதிக்கிறாய் ஆண்டவரே?" என்று திருவண்ணாமலையானிடம் கேட்டுக்கொண்டே வந்தேன். அப்பொழுது அவர் என்னுடைய அருள் குழந்தை என்பதை உணர்த்தினார்.


அப்பொழுது அன்புமணி ராமதாஸ் அவர்கள் வந்திருந்தார்கள். ஒரு மணி நேரம் லாக் பண்ணிவிட்டார்கள். இப்போது மீண்டும் திறந்தார்கள், எனக்கு வழி தெரியவில்லை. நான் என்ன பண்ணினேன் என்றால், அன்புமணி ராமதாஸிடம் பேசுவதற்காக அவரை நோக்கிச் சென்றேன். 


திருவண்ணாமலையில் என் கால் படாத இடங்கள் இல்லை. எல்லா தெய்வத்தையும், சிறப்புமிக்க ஒரு மரத்தையும் (வன்னி மரம் என்று நினைக்கிறேன்) காட்டினார்கள். ஒவ்வொரு கோவிலையும் திறந்து காட்டினார்கள். அங்கு வந்த ஆயிரக்கணக்கான பேருக்குக் கிடைக்காத பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அப்பொழுது இறைவனை உணர்ந்தேன்.


மீண்டும் அவர் மெயின் கேட்டிற்குச் சென்றுவிட்டார், எல்லாம் அடைத்துவிட்டார்கள். கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டது, என்ன செய்வது என்று தெரியவில்லை. இது மூன்றாவது சோதனை. "என்ன பண்றது? இரண்டு மணி நேரம் ஆயிற்று, நான் எங்கு செல்வது?" என்று செக்யூரிட்டியிடம் கேட்டேன். செக்யூரிட்டி சொன்னார், "எங்கே போக வேண்டும்?" என்று. என் குரூப் வந்திருந்தார்கள், அவர்களைச் சந்திப்பதற்காக "நான் எப்படி வெளியே போக வேண்டும்?" என்று கேட்டதற்கு, "இதோ அம்மாவைப் பார்த்துவிட்டுப் போகலாம்" என்று சொன்னார்கள். அப்பொழுது அம்மனையும் பார்த்துவிட்டு வெளியே வரும்போதும் எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.


பார்த்தீர்களா, தெய்வம் எவ்வளவு நம்மை சோதிக்கிறாரோ, அவ்வளவு கவலைகளுக்கு நடுவே நமக்கு ஒரு புனிதத்தைத் தருகிறார்! நாம் அவரை நேசிக்க நேசிக்க, அவர் நம்மைச் சோதித்துச் சோதித்து நல்ல பலன்களைக் கொடுப்பார் என்பதை நான் உணர்ந்தேன்.


மீண்டும் எல்லோரும் திட்டினார்கள், எனக்கு அழுகை வந்தது. "எனக்கு சாப்பாடு வேண்டாம்" என்று சொல்லி வெளியே சென்றேன். வெளியே செல்லும்போது எல்லோரும் அன்னதானத்திற்காக ஒரு வண்டியில் ஏறிக் கொண்டோம். முதல்முறையாக நான் வந்திருக்கிறேன்; அவர்கள் 25 வருஷமாகச் செய்கிறார்கள். ஆனால் நான் முதல்முறையாகத்தான் அன்னதானம் கொடுக்கச் சென்றிருந்தேன்.


அப்பொழுது வருபவர்கள் எல்லாம் பணக்காரர்களாக இருந்தார்கள், யாரும் என் கையில் இருந்து சாப்பிட வாங்கவில்லை. நான் மிகவும் அழுதுகொண்டிருந்தேன். "ஐயனே, நீ எத்தனையோ அவதாரம் எடுத்து வந்திருக்கிறாய். எனக்காக ஒரு முறை நீ அவதாரம் எடுத்து வர வேண்டும், அதை நான் காண வேண்டும்" என்று கூறினேன். அதுவும் சோதனை, யாரும் சாப்பாட்டை வாங்கவில்லை. மிகவும் கஷ்டமாக இருந்தது. அப்போதும் அழுதுகொண்டே, "ஏன் அப்பா இப்படி சோதிக்கிறாய்? ஒரு அன்னதானம் கொடுப்பதற்கு யாரும் வாங்கவில்லையே, நாங்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை" என்று புலம்பினேன்.


வண்டி எடுத்தார்கள் வேறு பக்கம் போவதற்கு. நான் "ஒரு ஐந்து நிமிடம் இருங்கள் எனக்காக, அப்புறம் வேற கேட்டிற்குச் செல்லலாம்" என்று கூறினேன். கேட்டின் வழியாக ஒரு மிகப்பெரியவர் வந்தார். ஒரு ஆறு அடிக்கு மேல் இருப்பார், நல்ல உடம்பு பலன், பீஷ்மர் போல இருந்தார். கருப்பாக இருந்தார். ஒரு சிவனுடைய ருத்ராட்ச பெரிய மாலை அணிந்திருந்தார். நல்ல பட்டை சிவன் திருநீறு அணிந்திருந்தார். முடியெல்லாம் சுருட்டை முடி, பார்ப்பதற்கு ஒரு மாதிரி முரட்டுத்தனமாக இருந்தார்.


"இவர் எங்கே வாங்கப் போகிறார்?" என்று நாங்கள் விட்டுவிட்டோம். அவரே வந்து, "இந்தாங்க சாப்பிடுங்கள்" என்று ஒரு பெண் கூறினாள். அப்பொழுது என் கையில் இருந்து வாங்கி இன்னொரு அம்மாவுக்கு, அப்புறம் ஒரு பொண்ணு... மூன்று பேருக்கு மாற்றிக் கொடுக்கிறோம். அப்பொழுது மாமா வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார்.


அவர் என்ன செய்தார் என்றால், "அம்மா மிகவும் பசிக்கிறது அம்மா, எனக்குச் சாப்பாடு கொடுங்கள்" என்று சொல்லி அந்த வேன் முன்னே ரோட்டில் படுத்துவிட்டார், எங்கள் முன்பு. "ஐயோ, இவ்வளவு பசியா!" என்று அப்படியே நாங்கள் பேச முடியாமல் நின்றுவிட்டோம். என்ன செய்வதென்று தெரியவில்லை.


அப்பொழுதுதான் உணர்ந்தேன், அங்கு வந்தது சிவபெருமான்தான் என்று. அப்புறமேல்தான் தெரிந்தது எங்களுக்கு, அதுவரை ஒன்றும் புரியவில்லை. அவர் வந்து சாப்பிட்ட பிறகு, எங்களால் சாப்பாடு கொடுக்க முடியாத அளவுக்குக் கூட்டம்! அந்தச் சாப்பாட்டைக் கொடுத்தும், மீதம் வந்தவர்களுக்குச் சாப்பாடு கொடுக்க முடியாத அளவிற்கு 25 கிலோவும் தீர்ந்துவிட்டது.


இப்பொழுது மனதில் ஆழமான ஆனந்தக் கண்ணீர் வந்தது! "அப்பா, தெய்வத்தைப் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது" என்று நினைத்தேன். வண்டி எடுத்தார்கள், திரும்பிப் பார்த்தோம். அவர் வாசலின் முன்பு, இறைவனின் திருவண்ணாமலை அண்ணாமலையார் முன்பு விழுந்து கும்பிட்டார். நான் வண்டி திரும்பும்போது திரும்பிப் பார்த்தேன், "ஐயனே, நீயா? ஐயனே, மீண்டும் ஒருமுறை பார்க்கலாம்" என்று பார்த்தேன்... காணாமல் சென்றுவிட்டார்!


என் உடம்பெல்லாம் சிலிர்க்கிறது. என்றும் கடவுள் இருக்கிறார், அதை உணரக்கூடியவர்கள் உணர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். நான் நிறைய விஷயங்களில் கடவுளைப் பார்த்திருக்கிறேன், உணர்ந்திருக்கிறேன். ஆனால் சோதனைகள் அதிகம் வரும். நகை, வீடு, பணம், சொத்து ஆசை, சந்தோஷம், மகிழ்ச்சி, ஆனந்தம், நடனம் அனைத்தையும் துறக்கும் போதுதான் இறைவன் நம் கண்களில் படுவார். இதுதான் உண்மை, நான் கண்ட உண்மை.


எல்லாவற்றிற்கும் ஆசைப்படுவேன் நான். ஆனால் இப்போது ஒவ்வொரு விஷயமாகப் புரிய வைக்கிறார் ஆண்டவர்.


தொடரும் அவரின் திருவிளையாடல்... சிவபெருமானின் திருவிளையாடல்!


(கட்டுரையாளர் மாலதி, நசியனூர், நெசவாளர் காலனி, சிந்தன்கோட்டை, எம்ஜிஆர் ரோடு, ஈரோடு)