வான் மேகம்.. பூப்பூவாய் தூவும்.. மனதைக் கொள்ளை கொள்ளும் மழை

Su.tha Arivalagan
Oct 21, 2026,03:06 PM IST

- ஈரோடு மாலதி


இயற்கையின் படைப்பில் பஞ்சபூதங்களில் ஒன்று மழைநீர்! "நீரின்றி அமையாது உலகு" என்ற வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப, மழை இன்றி இந்த பூமியில் உயிரே இல்லை. ஒவ்வொருவருக்கும் இயற்கையில் பிடிக்கும் விஷயங்கள் வெவ்வேறாக இருக்கலாம்; ஆனால், எனக்கு மிகவும் பிடித்தது மழைதான்!


நான் ரசித்த மறக்க முடியாத இடங்கள் இரண்டு.


முதல் இடம் - பவானிசாகர்


நான் பிறந்த ஊரான பவானிசாகர், கேரளாவில் இருந்து வரும் நீரின் அரவணைப்பில் குளிர்ந்திருக்கும். அங்கே வரும் தூறல்கள் மனதை மயக்கும். அந்த மழையோடு கூடிய தூறலில் குளிப்பது இயற்கை தந்த சொர்க்கமாகும்.


இரண்டாம் இடம் - கொல்லிமலை ஆகாயகங்கை




இறைவன் நமக்களித்த அற்புதமான கொல்லிமலை! அங்கே உள்ள 27 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து மேலே சென்றால், மேகமூட்டத்துடன் கூடிய அழகான தூறல்கள் நம்மை வரவேற்கும். அந்தச் சிவபெருமானை தரிசித்துவிட்டு, சுமார் 1500 படிகள் இறங்கினால் அங்கே பிரம்மாண்டமான 'ஆகாயகங்கை அருவி' நம்மைத் தழுவும். மண்ணிலிருந்து 20-25 அடி உயரத்தில் ஆர்ப்பரிக்கும் அந்த அருவியின் நீர்த்துளிகளுடன் மழையும் சேர்ந்து நனைக்கும் அழகு தனிச்சிறப்பு.


(குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆகாயகங்கை அருவியில் தியானம் செய்து, 27 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து, 1500 படிகள் ஏறி இறங்கி சாதனை படைத்தது எனக்குக் கிடைத்த பேறாகும்!)


மூன்றாம் இடம் - திருமூர்த்தி மலை


இயற்கையின் எழுதப்படாத காவியம் திருமூர்த்தி மலை. மும்மூர்த்திகள் வாழ்ந்ததாக ஐதீகம் உள்ள இந்த மலையின் கீழே நதி ஓடும். மலை மீது ஒரு கிலோமீட்டர் தூரம் ஏறிச்சென்றால், சாரலும் அருவியும் நம்மைத் தாலாட்டும். சிவன், பிரம்மா, விஷ்ணு மூவரும் வழங்கிய இந்தச் சொர்க்க பூமியில் மழையின் அழகை அனுபவிப்பது வாழ்வின் பொக்கிஷம்!


ஒரு சினிமாப் பாட்டு உண்டு..


"வான்மேகம் பூ பூவாய் தூவும்

தேகம் என்னவாகும் இன்பமானது நோகும்...

வானம் முத்துக்கள் சிந்தி வாழ்க என்றது

காதல் வென்றது மேகம் வந்தது பூக்கள் சிந்துது...

ஓஹோ மேகம் வந்ததோ வானிலே

நீரின் தோரணங்களே ஓ என் மனம் பொங்குதே..."


பஞ்சபூதங்களின் சங்கமம் இந்த பூமி என்றால், என் மனதைக் குளிர்விக்கும் ஐந்தாவது பூதமாய் என்றும் தங்குவது இந்த மழையே! வானம் தழுவும் இந்த நீர் அமுதம் உள்ளவரை, என் கவிதைகளுக்கும் நினைவுகளுக்கும் என்றும் ஓய்வில்லை!


(கட்டுரையாளர் மாலதி, நசியனூர், நெசவாளர் காலனி, சிந்தன்கோட்டை, எம்ஜிஆர் ரோடு, ஈரோடு)