- கவிஞர் கே. பிரியங்கா
நீ சுட்டால் தான் நிழலின் அருமை தெரியும்....
நீ அடித்தால் தான் மழையின் அருமை புரியும்..
வியர்வையைத் தந்து உழைப்பை சொல்லித்தரும் ஒரே ஆசான் நீ தான்!!
நீ இல்லை என்றால் பயிர் இல்லை
நீ இல்லை என்றால் உயிர் இல்லை..
வெயிலே, உன்னை திட்டுவோர் பலர்...
ஆனால் உன் அருமை தெரிந்தவர் சிலர்....

காலையில் நீ தரும் இளம் வெயில் காதல்...
மதியம் நீ தரும் சுடு வெயில் தண்டனை அல்ல, அது ஒரு பாடம்...
உன்னை கண்டு ஓடுபவன் சோம்பேறி....
உன்னோடு நின்று போராடுபவன் உழைப்பாளி...
நீ சுடச் சுடத்தான் இரும்பு கூட இளகும்...
வெயிலே நீ ஒரு கண்டிப்பான ஆசிரியன் தான்...
சுட்டுச் சுட்டுத் தான் வாழ்க்கையை கற்றுத் தருகிறாய்..
உழைப்பை புரிய வைக்கிறாய்!
வெயிலே, வா வா.!
(கே.பிரியங்கா, M.Sc., M.Ed. படித்தவர். 2019ல் ஜெட்லி உலக சாதனை புத்தகத்தின் "சமூகப் பிரச்சினைகளும் தீர்வுகளும்" தொடர் சொற்பொழிவு. 2019ல் ஜெயா தொலைக்காட்சியின் "உன்னை அறிந்தால்" நிகழ்ச்சியில் பங்கேற்பு.
2019ல் சென்னை விமான நிலைய ஆணையத்தின் "மெகா சுவர் ஓவியப் போட்டியில் பங்கேற்பாளர். 2021ம் ஆண்டு, அசிஸ்ட் உலக சாதனையின் "ஆசிரியர்களின் பங்கு" இணையவழி கருத்தரங்கில் பங்கேற்பாளர். அதே ஆண்டில் அகில இந்திய சாதனை புத்தகத்தின் "145 மணி நேரத் தமிழ் இணையவழி விவாதத்தில் பங்கேற்றுள்ளார்)
வழிகாட்டி
வெயிலே, வா வா.!
எல்லோருக்கும் புரியும் நான்… எனக்குப் புரிவேனா? - ரம்யாவின் கவிதைத் தோட்டம் (3)
விருந்துக்கு வாங்க .. ஒரு நிமிடக் கதை (38)
குந்திதேவி.. சோதனைகளையும் தியாகங்களையும் தாங்கி நின்ற தாயின் கதை!
இளையராஜா -தேவா சந்திப்பு கடைசி வரை நடக்காமலேயே போய் விட்டதே!
விஜய்யை முதலில் பாட வைத்தவர்.. ரஜினிகாந்த்துக்கு Title Vibe கொடுத்தவர்.. மறக்க முடியாத தேவா!
‘தேனிசைத் தென்றல்’ இசையமைப்பாளர் தேவா காலமானார்: திரையுலகம் அதிர்ச்சி!
களவும் கற்று மற.. இந்தப் பழமொழியோ நிஜமான அர்த்தம் என்ன தெரியுமா?
{{comments.comment}}