ஆகாய விண்மீன் துள்ளி குதிக்க.. ஆவும் அரை நொடி மெய்மறந்து நிற்க!

Oct 15, 2026,05:33 PM IST

- வே.மிதுன்ராஜ் 


இதழின் ஈரம்

குழலில் கீதமாக...

பச்சைக் கிளிகள் 

வானில் கோலம் போட...


காட்டுக் குயிலின் ராகம்

நெஞ்சில் மூழ்க...

மனதின் பாரம் 

கண்ணில் ஈரமாக...


நினைவின் ஓரம் 

விழி நீரும் ஓட...




களைப்பின் விளிம்பில் 

மெல்லிய தென்றல் தீண்ட...  

அந்திப் பொழுதில் 

ஆதவன் அனைய.... 


ஆகாய விண்மீன் 

துள்ளி குதிக்க.... 

ஆவும் அரை நொடி

மெய்மறந்து நிற்க... 


மயூர நடனம் 

மனதை மயக்க... 

தாளோடு மையும் சண்டையிட... 

கற்பனைக் கசிவில் அழகாய் தொடுத்தேன்.... 

கவிதைப் பூக்களை... 

இயற்கை அன்னைக்கு காதல் மாலையிட...


(வே.மிதுன்ராஜ், மு.க.ஆசிரியர் , ஈரோடு)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்