உன்னையே கதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா!

Su.tha Arivalagan
Sep 07, 2026,10:57 AM IST

- கவிமாமணி ஏரூர் அலாவுதீன்


நித்தமும் கற்பனையில் 

உன்னையே நினைத்து

நித்திரை இல்லா

இராத்தியின் தாலாட்டாக உன் நினைவுகள் என்னைக் கொல்லுதடி!!


பாதையில் நடக்கையிலும் 

குனிந்து எதையோ 

தேடிக் கொள்ளுது 

இரு விழிகளும்

உன்கால் தடமேனும் கண்டிட

முடியாதா என்று!!




கண்ணீரை மையாக்கி

உன் நினைவுகளைச்

செதுக்குகிறேன் 

கவிதைகளாகக்

கண்டிடுமோ உன்

விழிகள்!!


ஏங்கித்

தவிக்கின்றேன்

உனக்காக 

நீயில்லா வாழ்க்கை

எதற்காக நிலவே

எனக்கு!!