வெளியில் மழை பெய்யுதா.. வீட்டுக்குள்ள மிளகாய் பஜ்ஜி சுட்டு சாப்பிடலாம் வாங்க!

Su.tha Arivalagan
Oct 21, 2026,05:52 PM IST

- பசுங்கிளி


மழைக்காலம் வந்தாலே ஏதாவது சூடாக சாப்பிடத் தோன்றும். வடை பஜ்ஜி இப்படி மனசு தேடும். அப்படிப்பட்ட இந்த மழைக்காலத்தில் உங்களுக்காக சூடான மிளகாய் பஜ்ஜியுடன் வந்துள்ளேன்.. வாங்கி செஞ்சு சாப்பிடலாம்.


தேவையான பொருட்கள்*


கடலை மாவு - 250 கிராம் (1/4 கிலோ)

அரிசி மாவு - 50 கிராம்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

சமையல் சோடா (மாவுச் சோடா) - 1 சிட்டிகை

பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை

பஜ்ஜி மிளகாய் - 10

எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

சூடான எண்ணெய் - 1 டீஸ்பூன் (மாவுடன் சேர்க்க)


செய்முறை:




1. ஒரு அகலமான பாத்திரத்தில் மிளகாய்த்தூள், உப்பு, சமையல் சோடா மற்றும் பெருங்காயத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் நன்றாகக் கரைத்துக் கொள்ளவும் (இவ்வாறு முதலில் சேர்ப்பதால் உப்பும் காரமும் மாவுடன் சீராகக் கலக்கும்).


2.  உப்பு நன்றாகக் கரைந்த பிறகு, கடலை மாவு மற்றும் அரிசி மாவு இரண்டையும் சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு (அதிக நீர்த்தாகவோ அல்லது ரொம்ப கெட்டியாகவோ இல்லாமல்) தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்.


(டிப்ஸ்:  மாவு பிசையும்போது, அடுப்பில் சூடாக்கிய 1 டீஸ்பூன் எண்ணெய்யை இதில் ஊற்றி கலக்கினால், பஜ்ஜி எண்ணெய் குடிக்காமல் மொறுமொறுப்பாக வரும்).


3.  பஜ்ஜி மிளகாயைக் கழுவித் துடைத்துவிட்டு, நீளவாக்கில் நடுவில் மட்டும் கீறிவிட்டுக் கொள்ளவும். (காரத்தை விரும்பாதவர்கள் மிளகாய்க்குள் இருக்கும் விதைகளை லேசாக நீக்கிவிடலாம்).


4. வாணலியில் பொரிக்கத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் நன்றாகக் காய்ந்ததும், மிளகாயை மாவில் நன்றாக முக்கி எண்ணெயில் போடவும்.


5. அடுப்பை மிதமான தீயில் வைத்து, மிளகாய் இரண்டு பக்கமும் பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் வெந்தவுடன் எண்ணெயில் இருந்து எடுக்கவும்.


இப்போது சூடான, சுவையான, மொறுமொறுப்பான மிளகாய் பஜ்ஜி தயார்! இதைத் தேங்காய் சட்னி அல்லது சுடச்சுட ஃபில்டர் காபியுடன் பரிமாறினால் மழைக்காலத்திற்கு அருமையாக இருக்கும்.