- கவிதா, சென்னை
உலக ஆப்பிள் தினத்தைக் கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சிக்குரிய ஒன்று. "தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்லத் தேவையில்லை" என்று மருத்துவர்களே கூறுவார்கள். அந்த அளவுக்கு நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் அத்தனை அற்புதமான சத்துக்கள் ஆப்பிளில் நிறைந்துள்ளன. ஆரோக்கியமான உணவின் மூலமே நம் உடலுக்குத் தேவையான சக்தியும் ஆற்றலும் கிடைக்கிறது. அதற்குப் பழங்கள் பெரிதும் துணைபுரிகின்றன.
இருப்பினும், ஆப்பிள் என்பது பணக்காரர்கள் மட்டுமே எளிதில் வாங்கக்கூடிய ஒரு பழமாகவே இருக்கிறது. ஒரு கிலோ 200 ரூபாய் வரை விற்பதால், அது ஏழைகளுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. எனக்கு ஆப்பிளை விட கொய்யாப்பழமே மிகவும் பிடிக்கும். அது நீரிழிவு நோய்க்கு (சுகர்) மிகவும் நல்லது என்பதால் அதை விரும்பிச் சாப்பிடுவேன். ஆப்பிள் கிடைக்கிற போது உணவிற்காக ஓரிரு துண்டுகள் எடுத்துக்கொள்வேன். ஏழைகள் தங்களுக்கு மிக எளிதாகக் கிடைக்கக்கூடிய வாழைப்பழத்தைச் சாப்பிட்டே தேவையான ஆரோக்கியத்தையும் உடல் பலத்தையும் பெற்றுக்கொள்ளலாம்.
பழங்கள் என்று யோசித்தாலே எனக்கு உடனடியாக நினைவுக்கு வருவது பலாப்பழம்தான். முக்கனியில் மாம்பழத்தை ஏன் முதலிடத்தில் வைத்தார்கள் என்று தெரியவில்லை; தேன் சுவை கொண்ட பலாவையே முதலிடத்தில் வைத்திருக்க வேண்டும். இயற்கை வளங்கள் கொஞ்சும் கேரளாவில் விளையும் பலாப்பழத்தின் சுவையே தனித்துவமானது. "தித்திக்கும் மாம்பழம் சேலத்து மாம்பழம்..." என்று சிறுவயதில் பாட்டுப் படித்த நினைவிருந்தாலும், எனக்குப் பலாப்பழத்தின் மீதுதான் அலாதிப்பிரியம். அது முக்கனியில் இரண்டாம் இடத்தில் இருப்பது எனக்குச் சற்று வேதனையே. பழங்களுக்கு என்று ஒரு நாளை ஒதுக்கி விழா கொண்டாடுவதே வரவேற்கத்தக்க அழகான விஷயம்.

வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது கோடிகளுக்காக உழைப்பதில் உள்ளதா அல்லது கொள்கைகளோடு வாழ்வதில் உள்ளதா என்றால், நிச்சயமாகக் கொள்கைகளோடு வாழ்வதில்தான் உள்ளது! பணம் என்பது ஒரு மனிதனுக்கு அடிப்படைத் தேவைதான்; நாம் கல்லறைக்குச் செல்வதற்குக்கூடப் பணம் தேவை என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், கோடானு கோடி பணத்திற்குப் பின்னால் ஓடுவதை விட, கொள்கைகளோடு வாழ்வதே வாழ்க்கைக்குப் பிடிப்பைத் தரும்.
சுயஒழுக்கம், இரக்கம், ஈகை, பசியாற்றும் அன்னதானம் போன்றவை நாம் கடைப்பிடிக்க வேண்டிய சிறந்த கொள்கைகள். மனிதனுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட பகுத்தறியும் தன்மையைப் பயன்படுத்தி நாம் நல்வழியில் வாழ வேண்டும். ராமாயணம் "ஒருவனுக்கு ஒருத்தி" என்ற ஒழுக்க நெறியையும், மகாபாரதம் சூதாட்டத்தால் வரும் தீமைகளையும் நமக்கு போதிக்கின்றன.
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் ஒரு லட்சியப் பாதையும் கொள்கையும் உள்ளது:
குழந்தைகளைச் சிறந்த முறையில் வளர்த்து, தரமான கல்வியை வழங்கி, நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பது. பெற்றோரைக் கடைசிவரை அன்போடு பராமரித்துப் பார்த்துக்கொள்வது. கல்வியில் சிறந்து விளங்கி உயர்ந்த நிலையை அடைவது.
பணம் சம்பாதிப்பது இரண்டாவது பட்சமே. பேராசையோடு கோடிகளுக்காக உழைப்பதைத் தவிர்த்து, நமது தேவைக்கேற்ப உழைப்பதே மனநிறைவைத் தரும். "இருக்க ஓர் இடம், உண்ண உணவு, அவசியத் தேவைக்கேற்ற சொற்ப வருமானம்" இருந்தாலே வாழ்க்கையைச் சொர்க்கமாக மாற்றிக்கொள்ளலாம். "எண்ணம் போல் வாழ்க்கை" என்பதால் நம் எண்ணங்களும் உயர்ந்ததாக இருக்க வேண்டும்.
முகநூலில் (Facebook) நான் படித்த ஒரு உண்மைச் சம்பவம் நினைவுக்கு வருகிறது. ஒரு பணக்காரன் தான் சம்பாதித்த கோடிக்கணக்கிலான நவரத்தினங்கள், தங்கம், வைரம் ஆகியவற்றை ஒரு பெரிய அறையில் பூட்டி வைத்திருந்தான். அந்த அறையின் ரகசியக் கதவுக் குறியீடு (Password) அவனுக்கு மட்டுமே தெரியும். ஒருநாள் எதிர்பாராதவிதமாக அவன் அந்த அறைக்குள்ளேயே மாட்டிக்கொண்டான்; கதவின் ரகசிய எண்ணும் அவனுக்கு மறந்துபோனது. பசியினாலும் தாகத்தினாலும் வாடிய அவன், தான் வைத்திருந்த தங்கத்தையோ நவரத்தினங்களையோ உண்ண முடிவில்லை. இறுதியில், இறக்கும் தருவாயில் தன் விரலைக் கீறி ரத்தத்தால் சுவரில், "ஒருபோதும் பணம் உங்களுக்கு உணவாகவோ, உயிரைக் காப்பதாகவோ பயன்படாது" என்று எழுதி வைத்துவிட்டு மாண்டுபோனான்.
உழவன் ஏர் பிடித்தால்தான் நமக்குச் சோறு! எனவே, நமது தேவைகளுக்கான திருப்தியான வாழ்க்கை முறைக்குச் சம்பாதியுங்கள்; ஆடம்பர வாழ்க்கைக்காக ஓடாதீர்கள்.
நமது நாட்டின் மாபெரும் விஞ்ஞானி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் முதற்கொண்டு, பல அறிஞர்களும், கலைஞர்களும், திரைத்துறையினரும் ஒரு கொள்கையை முன்வைத்துப் போராடியதால்தான் வெற்றி வாகை சூடினார்கள். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தன் பாடல்கள் வழியாகவும், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தன் நடிப்பின் வழியாகவும் கொள்கைகளைப் பின்பற்றியே சாதித்தார்கள்.
என் தனிப்பட்ட வாழ்க்கையில் ஆன்மீகத்தைப் பரப்புவதும், அன்னை தெரசாவைப் போல இரக்கச் சிந்தனையோடு வாழவதுமே எனது கொள்கை. அதுபோல, திரைப்படத் துறையில் தன் பேத்திகளைச் சேர்த்து, அவர்களை வெள்ளித்திரையில் மின்னும் நட்சத்திரங்களாக உருவாக்கத் துடிக்கும் ஒரு தாத்தாவின் லட்சியமும் போற்றத்தக்க கொள்கையே.
"முயற்சி திருவினையாக்கும்" என்பதற்கேற்ப, மனிதன் தன்னுடைய உழைப்பையும் முயற்சியையும் முழுமையாகப் போட வேண்டும். அப்பொழுதுதான் இறைவனின் அருளால் அதற்குரிய பலன் கிடைக்கும்.
தீவிரமடையும் வடகிழக்குப் பருவமழை : பொது மக்களுக்குத் தமிழ்நாடு மின்வாரியம் முக்கிய அறிவுறுத்தல்!
தென்தமிழ் தலையங்கம்: பேச்சு நாகரிகத்தின் வீழ்ச்சியும் - "அல்காரிதம்" அரசியலும் - பரிதாப தமிழ்நாடு!
முக்கனிகளில் சூப்பர் பழம் பலா தான் - மாம்பழமெல்லாம் ரெண்டாவதுதான்!
வியாழக்கிழமை வந்தா மறக்க முடியாத சோலாபூரி.. பிறந்த நாள் கொண்டாட்டங்கள்.. மறையாத நினைவுகள் (2)!
வெளியில் மழை பெய்யுதா.. வீட்டுக்குள்ள மிளகாய் பஜ்ஜி சுட்டு சாப்பிடலாம் வாங்க!
மாபெரும் வரலாற்றுக்குள் புதைந்துள்ள தமிழர்கள்!
எது முன்னேற்றம்?
நம்ப குழந்தைதானே!
ஊரெல்லாம் ஆயுத பூஜை திருவிழா.. மிக மிக அழகான ஆயுதம்!
{{comments.comment}}