Exit Poll: தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும்.. தவெகவுக்கு 3வது இடம்.. எக்ஸிட் போல்

Su.tha Arivalagan
Apr 29, 2026,08:15 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சியமைக்கும் என்று  பல்வேறு எக்ஸிட் போல் முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி 3வது இடத்தைப் பிடிக்கவுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சட்டசபைத் தேர்தல் நடந்த தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் வாக்காளர்களிடம் வாக்குப் பதிவுக்குப் பிறகு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் தெரிய வந்த முடிவுகளை வைத்து தற்போது எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகியுள்ளன.


ஒவ்வொரு ஊடகமும் நடத்திய இந்த எக்ஸிட் போல் முடிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது:


என்டிடிவி பீப்பிள்ஸ் பல்ஸ் எக்ஸிட் போல்




திமுக - 125 டூ 145

அதிமுக - 65 டூ 80 

தவெக - 18 டூ 24 

மற்றவை 2-6


ரிபப்ளிக் டிவி பி மார்க்:


திமுக - 124 டூ 145

அதிமுக 65 டூ 85 

தவெக - 16 டூ 26 

மற்றவை - 1 டூ 6


திமுகவுக்கு 155 - சத்தா பஜார் எக்ஸிட் போல்


திமுக - 145 டூ 155

அதிமுக - 45 டூ 65

தவெக - 7 டூ 9


ரிபப்ளிக் டிவி மாட்ரிஸ்:


திமுக - 122 டூ 132, அதிமுக - 87 டூ 110, தவெக - 10 டூ 12, மற்வை - 0 டூ 6


ஜேவிசி எக்ஸிட் போல்: அதிமுக 128 டூ. 147, திமுக 75 டூ 85,  தவெக - 8 டூ 15


அஸ்ஸாமில் மீண்டும் பாஜக ஆட்சி - எக்சிட் போல்


அஸ்ஸாம் மாநிலத்தில் ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என ஆக்சிஸ் மை இந்தியா எக்சிட் போல் கணித்துள்ளது. பாஜகவுக்கு 100 இடங்கள் வரையும், காங். கூட்டணிக்கு 36 இடங்கள் வரையும் கிடைக்கும் என கணிப்பு