சென்னை: ஐந்து சட்டசபைத் தேர்தல் முடிவுக்கு வருகிறது. இன்று மாலையுடன் கடைசிக் கட்ட வாக்குப் பதிவும் முடியப் போகிறது. அதைத் தொடர்ந்து ஒரு தீபாவளிக்காக தமிழ்நாடே காத்திருக்கிறது.. அட ஆமாங்க, எக்சிட் போல் எனப்படும் வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வரவுள்ளன.
தேர்தலில் வாக்களித்து விட்டு வரும் மக்களிடம் நீங்க யாருக்கு ஓட்டுப் போட்டீங்க என்ற கேட்டு அதை வைத்து வெற்றி தோல்வியைக் கணிப்பதுதான் இந்த எக்சிட் போல் எனப்படும் வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பாகும்.
இது அப்படியே நிஜ முடிவைப் பிரதிபலிக்கும் என்று கூற முடியாது. பல நேரங்களில் கருத்துக் கணிப்பு முடிவுகள் தவறாகத்தான் போயுள்ளன. இருந்தாலும் மக்களின் மன நிலையை அறிய இது ஒரு வாய்ப்பாக பார்க்கப்படுவதால் இந்த எக்சிட் போல் முடிவுகளை மக்கள் ஆர்வமாக பார்ப்பார்கள்.

இந்த முறை இதுவரை இல்லாத அளவுக்கு எக்சிட் போல் முடிவுகள் கடும் எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் தூண்டி விட்டுள்ளன.. காரணம், தவெக தலைவர் விஜய்யின் அரசியல் வருகை. அவரது கட்சி குறித்தும், அது வாங்கப் போகும் ஓட்டு குறித்தும், தேர்தல் முடிந்த தினத்திலிருந்தே சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட போஸ்ட்களைப் பார்க்க முடிகிறது. அவங்க மட்டுமா.. மத்த கட்சிகளும்தான் போட்டுத் தாக்கிக் கொண்டுள்ளன.
அதையெல்லாம் பார்க்கும்போது மண்டை சுத்தி மயக்கமே வருது சாமி.. சரி விடுங்க.. வாங்க கொஞ்சம் எக்சிட் போல் ஜோக்ஸ் (மொக்கையாதான் இருக்கும்.. அட்ஜஸ்ட் பண்ணிப் படிங்க) படிச்சுட்டு வரலாம்..!
நாலு மே வரட்டும்
சுப்பு: ஏன் மாப்ளே எக்சிட் போல் முடிவு வருதே.. நாலு கட்சியிலே யார் ஜெயிப்பாங்கன்னு நினைக்கிற
குப்பு: அட.. நாலு மே வரட்டுமே மாப்ளே
சுப்பு: அது எப்படி மாப்ளே. நாலுமே ஜெயிக்க முடியும்
குப்பு: அட கூறு கெட்ட மாப்ளே.. "4, மே" வரட்டும்.. ரிசல்ட்டே தெரிஞ்சுரும்ல.. அதைச் சொன்னேன்டா!
--
ரிசல்ட் பீதி
நண்பன் 1: என்னடா, இன்னைக்கு எக்சிட் போல் வருதுன்னு ரொம்ப டென்ஷனா இருக்க? நீ என்ன அந்த கட்சியில மெம்பரா?
நண்பன் 2: அதெல்லாம் இல்லடா... எக்சிட் போல் வந்தாலே எங்க அப்பாவுக்கு பழைய ஞாபகம் வந்துடுது.
நண்பன் 1: என்ன ஞாபகம்?
நண்பன் 2: என்னோட எக்ஸாம் ரிசல்ட் வந்தப்போ, என்னைய வீட்டை விட்டு "எக்சிட்" பண்ண பார்த்தாரே, அந்த ஞாபகம் தான்!
--
எல்லாம் ஒரு கணிப்பு தான்
மனைவி: ஏங்க, டிவி-ல எக்சிட் போல் போடுறாங்க, யாரு ஜெயிப்பாங்கன்னு கரெக்டா சொல்லிடுவாங்களா?
கணவர்: அதெல்லாம் ஒரு குத்துமதிப்பு தான். இப்போ நான் ஹோட்டலுக்கு போயிட்டு வந்து, "சாப்பாடு சூப்பரா இருக்கும்"னு சொல்ற மாதிரி.
மனைவி: அப்போ நிஜமான ரிசல்ட்?
கணவர்: அது வீட்ல வந்து சாப்பிடும் போது தான் தெரியும்... உப்பு உறைப்பு சரியா இருக்கா இல்லையான்னு!
--
ஆப்பரேஷன் சக்சஸ், ஆனா...?
தொண்டர் 1: தலைவர் எக்சிட் போல்ல நாம தான் ஜெயிக்கிறோம்னு சொன்ன உடனே, லட்டு ஆர்டர் பண்ணிட்டாரு!
தொண்டர் 2: ஒருவேளை தோத்துட்டா என்ன பண்றது?
தொண்டர் 1: அதுக்கும் ஐடியா வச்சிருக்காரு... "ஜெயிச்சா லட்டு, தோத்தா அதையே உருட்டி 'அல்வா'ன்னு சொல்லி ஊருக்கே கொடுத்துட வேண்டியது தான்!"
--
ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் பாஸு!
பேட்டியாளர்: சார், எக்சிட் போல் முடிவுகளை மக்கள் எப்படி எடுத்துக்கணும்?
அரசியல் நிபுணர்: ரொம்ப சிம்பிள். கல்யாணத்துக்கு முன்னாடி வர்ற 'ப்ரீ-வெடிங் ஷூட்' (Pre-wedding shoot) மாதிரி தான்.
பேட்டியாளர்: புரியலையே?
அரசியல் நிபுணர்: பாக்குறதுக்கு ரொம்ப கலர்ஃபுல்லா, சந்தோஷமா இருக்கும். ஆனா கல்யாணம் (ரிசல்ட்) முடிஞ்சதுக்கு அப்புறம் தான் தெரியும்... நிஜமான அடிதடி அங்க தான் இருக்குன்னு!
Sripriya Story: தன்னம்பிக்கை கதை.. முள் வழி நடந்து முல்லை மலர்ந்தவள்!
Exit Poll கலாட்டாக்கள்: "நாலு மே வரட்டும்".. முடியலையே.. முடியலையேடா!
தென்றலே என்னைத் தொடு.....!
தமிழக சட்டசபை தேர்தல் 2026 : யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் என்ன நடக்கும்?
5 மாநில சட்டசபை தேர்தல் 2026: இன்று மாலை வெளியாகிறது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
Deepa Ravi Poem: பரந்து விரிந்த வானம்.. வியந்து தான் போகிறேன்!
சர்வதேச நடன தினம் 2026: கலை உலகில் காலடி எடுத்து வைக்கும் இளம் தாரகை வேதா ஸ்ரீ
செந்தில் பாலாஜி மீதான டிரான்ஸ்பார்மர் ஊழல் வழக்கு: சிபிஐ.,க்கு மாற்ற உத்தரவு
Tamil Nadu: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில்.. மாணவர் சேர்க்கை 1 லட்சத்தைத் தாண்டி அசத்தல்!
{{comments.comment}}