39 வயதிலேயே சங்கீத கலாநிதி: கர்நாடக இசையின் அசைக்க முடியாத மேதை - செம்மங்குடி!

Oct 31, 2026,06:26 PM IST
- தி. மீரா

செம்மங்குடி சீனிவாச ஐயர் கர்நாடக இசையின் மிகச் செல்வாக்குமிக்க கலைஞர்களில் ஒருவர். தமிழ்நாட்டின் திருக்கொடிக்காவலில் பிறந்து, செம்மங்குடி ஊரில் வசித்தவர் என்பதால் “செம்மங்குடி” என்ற பெயருடன் அறியப்பட்டார்.

செம்மங்குடி, தனது இசைப் பயிற்சியை மகாராஜபுரம் விஸ்வநாத ஐயரிடம் பெற்றார்; அவருடைய சீடர் பாரம்பரியம் இன்றும் கர்நாடக இசையில் முக்கியமானது. மாணவர்களும் இசை வட்டாரங்களும் அவரை அன்புடன் “செம்மங்குடி மாமா” என்று அழைத்தனர். 2003 அக்டோபர் 31 அன்று, 95 வயதில் சென்னையில் காலமானார்.

செம்மங்குடி பாடும் பாணி ராக அழகு, பதம் தெளிவு, கீர்த்தனை வளம் ஆகியவற்றுக்குப் பெயர் பெற்றது; இது பின்வந்த பல பாடகர்களுக்கு வழிகாட்டியாக அமைந்தது. அவரது குரல் இளமையாக இருக்காவிட்டாலும், இசையின் ஆழம், ராக விரிவாக்கம் மற்றும் இலக்கியப் பிரதிபலிப்பு மூலம் ரசிகர்களைக் கவர்ந்தார். பல முன்னணி கலைஞர்களுக்கு குருவாக இருந்தவர் செம்மங்குடி சீனிவாச ஐயர்.

குறிப்பாக எம். எஸ். சுப்புலட்சுமி, டி. எம். தியாகராஜன், வயலின் கலைஞர் டி. என். கிருஷ்ணன் ஆகியோர் அவரது முக்கிய சீடர்களில் அடங்குவர்.

தனது 39 வயதிலேயே சங்கீத கலாநிதி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்க சாதனை ஆகும். அதேபோல அவரது குரு மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் அதற்கு முந்தைய ஆண்டே சங்கீத கலாநிதி பெற்றிருந்தது, குரு–சீடர் இருவருக்குமான இசைப் பெருமையை வெளிப்படுத்துகிறது.

கர்நாடக இசையில் பாடகராக மட்டுமல்லாமல், சீடர்களை உருவாக்கிய குருவாகவும், இசைப் பாரம்பரியத்தைப் பாதுகாத்தவராகவும் செம்மங்குடி சீனிவாச ஐயர் நினைவுகூரப்படுகிறார்.



செம்மங்குடி சீனிவாச ஐயர் பல ராகங்களில் சிறப்பாகப் பாடியிருந்தாலும், கல்யாணி, தோடி, பைரவி, கம்போதி, கரகரப்பிரியா, ஸ்ரீரஞ்சனி, முகாரி, ஆரபி, சாலக பைரவி போன்றவை அவருக்கு மிகவும் பிடித்த ராகங்களாகும்.

செம்மங்குடி ராகமாலிகை பாடல்களிலும் சிறந்து விளங்கினார்; வராளி, தன்யாசி, கேதாரகௌளை, ஷண்முகப்ரியா, சாவேரி, பைரவி, ஹம்சாநந்தி, காபி போன்ற ராகங்களை ஒரே பாடலில் இணைத்துப் பாடியுள்ளார்.

அவரது கச்சேரிகளில் மாயாமாளவகௌளை, தேவமனோகரி, சக்ரவாகம், வராளி, தேனுகா, காபி, கமாஸ், மத்தியமாவதி போன்ற ராகங்களும் இடம்பெற்றுள்ளன. செம்மங்குடி பாணியில் ராக விரிவாக்கம், பதம் தெளிவு, கீர்த்தனை வளம் மற்றும் பல்லவிப் பாடல்கள் முக்கிய இடம் பெற்றன.

கல்யாணியில் அவர் பாடிய “பிரண வராலீச்சி ப்ரோவுமு”, “பிரண ப்ரோவயிதே”. காம்போதியில், “ஓ ரங்கசாயீ”, தோடியில் “கொலுவாமறெகடா”, பைரவியில் “ஸ்ரீத கமலாகுச”, கரகரப்பிரியாவில் “ராமா நி சமானமேவரு” ராகங்கள் அவரது இசையில் மிகவும் முக்கியமானவை மட்டுமல்ல, அவரது சீடர்கள் மற்றும் பின்வந்த தலைமுறை கலைஞர்களுக்கும் வழிகாட்டியாக அமைந்தன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வங்கக்கடலில் தீவிரமடைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி: வட தமிழகம், தெற்கு ஆந்திராவை நோக்கி நகர்கிறது!

news

39 வயதிலேயே சங்கீத கலாநிதி: கர்நாடக இசையின் அசைக்க முடியாத மேதை - செம்மங்குடி!

news

தென்தமிழ் தலையங்கம்: திராவிட எதிர்ப்பு நிலையிலிருந்து முழுமையாக விலகுகிறாரா சீமான்?

news

முதல்வர் விஜய்யின் மெகா டூர் பிளான்: 5 தொகுதி இடைத்தேர்தலில் தெறிக்க விட தவெக ரெடி!

news

சென்னை, தேனியை தொடர்ந்து கோவையில் இருந்தும் கைதி தப்பியோட்டம் - 4 போலீஸார் சஸ்பெண்ட்

news

சோர்வால் வளர்ச்சி கெடும் சுயமில்லா வேலை கெடும் - ஔவையின் பொன்மொழி 60 (8)

news

வெயிலோ மழையோ.. எதுவா இருந்தா என்ன.. சுரைக்காய் பஜ்ஜிதான் துணைக்கு இருக்கே!

news

யாருக்கும் தெரியாத அம்மாவின் வலி - கடைசி பெஞ்சில் இருந்த பெண்(4)

news

"புண்பட்ட மனதை புகை விட்டு ஆற்று" - இதோட உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்