10ம் வகுப்பில் தோல்வியா.. கவலை வேண்டாம்.. ஜூன் மாதம் துணைத் தேர்வு எழுதலாம்
சென்னை: 10ம் வகுப்பில் தேர்ச்சி பெறத் தவறிய மாணவர்களுக்காக ஜூன் மாதம் 8ம் தேதி முதல் 15ம் தேதி வரை துணைத் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இது தொடர்பான சில முக்கியத் தகவல்கள் மாணவர்களுக்காக:
மாணவர்கள் தங்களுடைய தற்காலிக மதிப்பெண் பட்டியலை வரும் 22.05.2026ம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம்.
தங்கள் விடைத்தாளின் ஸ்கேன் நகலைப் பெற விரும்பும் மாணவர்கள் 22.05.2026 முதல் 27.05.2026 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
துணைத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் 26.05.2026 முதல் 09.06.2026 வரையிலான தேதிகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த மாணவர்களுக்கான துணைத்தேர்வுகள் வரும் ஜூலை மாதம் 08.07.2026 முதல் 15.07.2026 வரை நடைபெறும்.
மதிப்பெண்களை மறுமதிப்பீடு அல்லது மறுகூட்டல் செய்ய விரும்பும் மாணவர்கள் 17.06.2026 முதல் 19.06.2026 வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.