சென்னை: தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் பொதுவான மாவட்ட தேர்ச்சி விகிதத்தில் புதுக்கோட்டை முதலிடத்தைப் பிடித்துள்ளது. அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை சிவகங்கை மாவட்டம் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.
ஒட்டுமொத்தப் பள்ளிகளில் முதலிடம் பெற்ற மாவட்டங்கள் (அனைத்துப் பள்ளிகள்):
அனைத்துப் பள்ளிகளையும் உள்ளடக்கிய பொதுவான தேர்ச்சி விகிதப் பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டம் 97.57% தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
டாப் 5 மாவட்டங்கள் விவரம்:

புதுக்கோட்டை - 97.57 %
சிவகங்கை - 97.54 %
தஞ்சாவூர் - 97.41 %
திருச்சி - 97.31 %|
கன்னியாகுமரி - 97.30 %
---
அரசுப் பள்ளிகளில் சிவகங்கை மாவட்டம் முதலிடம்:
அரசுப் பள்ளிகளுக்கான பிரத்யேகத் தேர்ச்சிப் பட்டியலில் சிவகங்கை மாவட்டம் 97.42% தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பெற்று அசத்தியுள்ளது.
டாப் 5 மாவட்டங்கள்
சிவகங்கை - 97.42 %
புதுக்கோட்டை - 97.09%
தஞ்சாவூர் - 96.89%
இராமநாதபுரம் - 96.78%
திருச்சி - 96.48 %
மாற்றுத் திறனாளிகள், சிறைவாசிகள் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்ச்சி விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதன் விவரம் பின்வருமாறு:
மாற்றுத் திறனாளி மாணவர்கள்: தேர்வெழுதிய 13,292 மாணவர்களில், 11,416 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 85.89% ஆகும்.
சிறைவாசிகள்: தேர்வெழுதிய மொத்த சிறைவாசிகளின் எண்ணிக்கை 370. இதில் 354 பேர் தேர்ச்சி பெற்று 95.68% என்ற மிகச் சிறந்த தேர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளனர்.
தனித்தேர்வர்களாகப் பங்கேற்ற 24,353 நபர்களில், 8,744 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களின் தேர்ச்சி விகிதம் 35.91% ஆக உள்ளது.
ஒட்டுமொத்தப் பள்ளிகள் மற்றும் அரசுப் பள்ளிகள் ஆகிய இரண்டு பட்டியல்களிலும் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் மற்றும் திருச்சி ஆகிய நான்கு மாவட்டங்கள் முதல் 5 இடங்களுக்குள் வந்து தங்களது கல்வித் தரத்தை நிலைநிறுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில்.. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: 11 மாவட்டங்களில் இன்றே மழை
US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!
ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!
ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!
Chettinadu Recipes: அருமையான செட்டிநாட்டு ரெசிப்பி .. முருங்கைக் கீரை எள்ளு பொடி!
Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?
ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் அடுத்த தலைமுறைக்கானதா?
சிவசங்கரி.. சமூக நியாயங்களையும்.. மனித உணர்வுகளையும் ஆழமாகத் தொட்டவர்!
Travel Time: அதிகம் கேட்கப்படாத ஹாரன்.. மனம் கவரும் கேரளம்!
{{comments.comment}}