சென்னை: தமிழகத்தில் வெளியாகியுள்ள 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில், மாணவ-மாணவிகள் பாடவாரியாகப் பெற்றுள்ள தேர்ச்சி விகிதம் மற்றும் பாடங்களில் முழு மதிப்பெண்கள் (100/100) பெற்றவர்களின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆண்டு அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களில் வழக்கம்போல மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். அதில்தான் அதிக அளவில் மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
பாடவாரியான தேர்ச்சி விகிதம்

ஆங்கிலப் பாடத்தில் மிக அதிகபட்சமாக 99.44% தேர்ச்சிப் பதிவாகியுள்ளது. தமிழ் மற்றும் இதர மொழிகளில் 98.43% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ் / மொழிப்பாடம் - 98.43 %
ஆங்கிலம் - 99.44 %
கணிதம் - 97.36
அறிவியல் - 98.00 %
சமூக அறிவியல் - 97.93%
நூற்றுக்கு நூறு எடுத்த தங்கங்கள்:
இந்த ஆண்டு அறிவியல் பாடத்தில் மட்டும் 10,476 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக சமூக அறிவியல் மற்றும் கணிதத்தில் மாணவர்கள் அதிக சென்டம் அடித்துள்ளனர்.
தமிழ் / மொழிப்பாடம் - 34
ஆங்கிலம் - 92
கணிதம் -3,194
அறிவியல் - 10,476
சமூக அறிவியல் - 3,336
ஏதேனும் ஒரு பாடத்திலாவது 100-க்கு 100 முழு மதிப்பெண்கள் பெற்ற ஒட்டுமொத்த மாணவர்களின் எண்ணிக்கை 17,132 ஆகும்.
இதில் அரசுப் பள்ளிகளில் படித்து, ஏதேனும் ஒரு பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 2,774 ஆக உயர்ந்து சாதனை படைத்துள்ளது.
அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களில் சென்டம் வாங்கியவர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்களைத் தொட்டுள்ள நிலையில், மொழிப்பாடங்களான தமிழிலும் (34 பேர்), ஆங்கிலத்திலும் (92 பேர்) மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில்.. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: 11 மாவட்டங்களில் இன்றே மழை
US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!
ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!
ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!
Chettinadu Recipes: அருமையான செட்டிநாட்டு ரெசிப்பி .. முருங்கைக் கீரை எள்ளு பொடி!
Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?
ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் அடுத்த தலைமுறைக்கானதா?
சிவசங்கரி.. சமூக நியாயங்களையும்.. மனித உணர்வுகளையும் ஆழமாகத் தொட்டவர்!
Travel Time: அதிகம் கேட்கப்படாத ஹாரன்.. மனம் கவரும் கேரளம்!
{{comments.comment}}