இறைவன் அளித்த இணையற்ற அருட்கொடை
- இரா. மும்தாஜ் பேகம்
என்னை வார்த்தெடுக்க
இறைவன் எனக்களித்த இணையற்ற அருட்கொடை
என்அன்னையும் தந்தையும்
அன்னை கரம் நீட்டி அவர்தான் உன் தந்தை என்றாள்
அவருக்கு நிகர் ஒருவர் அவனியில் இல்லை என்பேன்
மண்ணுக்கு மரம் அழகு
மண்ணுக்கு மழை அழகு
கண்ணுக்கு இமை அழகு
இந்தப் பெண்ணுக்குஎன் தந்தையே பேரழகு
அவர்துன்பத்தை அகத்தில் புதைத்து
இன்பத்தை வெளியில் காட்டியவர்
அன்பதனை செயலில் காட்டியவர்
தன் துயர் மறைத்து, தன்வலி மறைத்து
காலமெல்லாம் உழைத்து
கண்ணியத்தோடு எங்களை காத்து வந்த கடவுள்
பசி என்று கூறி நான் பார்த்ததில்லை
பட்டகாயங்களின் வலியையும்
வெளியில்கூறியதில்லை
எச்சி கிளாஸ் கழுவினார், எண்ணி எண்ணி செலவு செய்வார்
உப்பு மூட்டை தூக்கிச் சென்று
ஊர் ஊராய் விற்று வந்தார்
எங்களை கரை சேர்க்க என்னென்ன
அவதாரம் எடுத்தார்
அந்நிய நாடு சென்று அங்கேயும் கூலி வேலை
அவர் பெற்ற துயருக்கு அளவே இல்லை
இதுபோன்றே வாழ்கின்றார்
(இரா. மும்தாஜ் பேகம், கிரியேட்டிவ் ரைட்டர்ஸ், திருச்சி)