- டிலாணி ஸ்ரீதரன்
உயிரணுவில் உயிராக்கி
உலகத்தைக் காட்டியவரே
உடலை வருத்தியே
உயிராய்த் தாங்கியவரே,
கவலைகளை மறைத்து
கண்ணாய்க் காத்தவரே
தோளிலமர்த்தி அகிலத்தை
சுற்றித் திரிந்தவரே,
நான் அழுதால்
அம்மாவைத் திட்டுபவரே
பிரிந்தே வாழ்ந்தேனே
பிள்ளைப் பருவத்திலிருந்தே,

திருமணமாகியும் குழந்தையாக
என்னை அணைப்பவரே
அயல்நாட்டுக்குச்
செல்ல வேண்டாமென
அழுதவரே,
காலனவனின் பிடியிலே
சிக்கித் தவிப்பவரே
சிந்தையும் கலங்கி
மெளனமாக சிதைகின்றேனே,
உள்ளொன்றும் புறமொன்றுமாக
உணர்வுகளோடு
தவிக்கின்றேனே
தொலைவுத்தான்
உங்களருகே
வரவிடாமல் தடுக்கிறதே,
தொடருகிறதே தொய்வில்லாமல் நோயுங்களை துரத்தியே
மன்றாடி கேட்கிறேன்
உங்கள் உயிரை,
மாசற்ற உங்களின்
மழலை சிரிப்பை
மனம் உடைந்து
தனியாய் தவிக்கிறேனே,
உள்ளுக்குள் இறந்தும்
வெளியில் சிறந்தும்
உருகியே தினம்
மெழுகாய் நானும்,
உதிரமும் உறைகிறது
உறக்கமும் இரக்கமின்றி கொல்கிறது
ஊசலாடும் உங்கள் உயிரும் என் உருகித் தவிக்கும் என்னிதயமும்
நிம்மதியடைவது எப்போது????🥲🥲🥲
அப்பா என்ற அழகுத் தமிழை சொல்லிக் கொடுக்க மறந்தீர்களா???
இதுவரை அப்பா என்று கூப்பிட்டதில்லையே....
டெடி
எடுக்கும் பிறவியெல்லாம் உங்களுக்கு மாத்திரமே மகளாத் துடிக்கும்.....
உங்கள் மகள்!
ஜெம் கிரானைட் வீரமணி விவகாரம்: தவெக-திமுக இடையே முற்றும் மோதல்
நடிகை அம்பிகா மீது சகோதரி ராதா பரபரப்பு புகார்: ரூ.46 கோடி மோசடி செய்ததாக போலீசில் புகார்
"நிர்வாக அறிவு இருக்கிறதா?" – தவெக அரசை கடுமையாக விமர்சித்து மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
மா(மே)ரியம்மாள் பவனம்.. ஒரு நிமிடக் கதை (19)
வங்கக்கடலில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!
என் தமிழ்.. ஏன் தமிழ்?
ஏகாந்தம்.. அழகிய முழு நிலவொளியில் ஆனந்த ராகம் பாடி!
Short Story: காணாமல் போன கண்ணன்
மிளகு பொங்கல் வாசம் மிடுக்காய் பரவி வீசும் பலகாய்கறி சாம்பார் படக்கென பசி தூண்டும்!
{{comments.comment}}