சென்னை: ‘கெட்ட வார்த்தை’ பேசுறதும், ‘டபுள் மீனிங்’ல (இருபொருள் பட) பேசுறதும் தமிழ்நாட்டுல தனிக் கலைங்க! இது ரெண்டுமே மனுஷனுக்குள்ள எப்போ, எப்படி வந்து ஒட்டிக்குதுன்னு பார்த்தா, அது ஒரு சுவாரஸ்யமான மனோதத்துவப் பயணம்.
ஒரு மனுஷன் எப்போ இதையெல்லாம் பேச ஆரம்பிக்கிறான் அப்படின்னு யோசிச்சு பார்த்தா, அவன் ஒன்னும் வயித்துல இருந்து பிறக்கும்போதே "லக்கேஜ்" மாதிரி இதோட பிறக்கறதில்ல. பள்ளிப் பருவத்துல ஆறாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரைக்கும் ஒருவிதமான ‘கெத்து’ காட்டுற மனநிலை வரும் பாருங்க, அங்கதான் இதோட முதல் விதை விழுறது.
கெட்ட வார்த்தையோ, டபுள் மீனிங்கோ பேசினா நாம ஏதோ பெரிய 'அடல்ட்', கேங்ல நாமதான் கெத்துன்னு நினைக்கிற அறியாமை அது. அந்த வயசுல வார்த்தைக்கு முழு அர்த்தமே தெரியாது, ஆனா சுத்தி முத்தி பார்த்துட்டு ரகசியமா பேசி சிரிச்சுப்பாய்ங்க!
அப்படியே காலேஜ் லைஃப் உள்ள நுழையும் போது, இது அடுத்த லெவலுக்கு போயிடும். இங்க கெட்ட வார்த்தையும் டபுள் மீனிங்கும் வெறும் பேச்சு கிடையாது, அது ஒரு “பாச மொழி”. "மச்சான், எப்படிடா இருக்க?" அப்படின்னு சாதாரணமா கேட்காம, முன்னாடியும் பின்னாடியும் ரெண்டு கெட்ட வார்த்தையைச் சேர்த்து, அதுக்கு நடுவுல ஒரு டபுள் மீனிங் பஞ்ச் வச்சாத்தான் அது உண்மையான நட்பாம் (எல்லோரும் இல்லை, சிலருக்கு)

காலேஜ் கேண்டீன்ல உட்கார்ந்துட்டு, வர்ற போற விஷயங்களை வச்சு டபுள் மீனிங்ல கமெண்ட் அடிச்சுட்டு, மொத்தக் கூட்டமும் சேர்ந்து சிரிக்கிறப்போ கிடைக்கிற அந்த ஒரு ‘கிக்’ இருக்கே... அதுலதான் பலருக்கு இந்த பழக்கம் ரத்தத்துல ஊறிப்போகுது.
அப்புறம் வாழ்க்கையில ஆபீஸ், குடும்பம்னு பிரஷர் ஏறும்போது, இந்த ரெண்டு பழக்கமும் ரெண்டு வேற வேற வேலையைச் செய்யுது. அளவுக்கு அதிகமான கோபம், விரக்தி, அல்லது திடீர்னு கால்ல கல்லு தடுக்கி அடிபடும்போது வர்ற கெட்ட வார்த்தை ஒரு பிரஷர் குக்கர் விசில் மாதிரி! மனசுல இருக்கிற கோபத்தை டக்குனு ரிலீஸ் பண்ணி, ஒரு எமோஷனல் ரிலீஃப் கொடுக்கும்.
ஆனா, இந்த டபுள் மீனிங் பேச்சு இருக்கே... அது கொஞ்சம் டேஞ்சரான கேம். சில பேர் வேலையிடத்துல இருக்குற ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்கிறதா நினைச்சுட்டு, எல்லா விஷயத்தையும் டபுள் மீனிங்ல பேசி மொக்கை வாங்கிட்டு இருப்பாங்க. எதிரில இருக்குறவங்க சங்கடப்படுறாங்களா இல்ல ரசிக்கிறாங்களான்னு கூட தெரியாம, ‘நான் ரொம்ப ஹ்யூமரஸ்’னு நினைச்சுக்கிட்டு வழியுறது பல இடங்கள்ல நடக்குற கூத்துதான்.
இப்பெல்லாம் ஸ்மார்ட்போனும் அன்லிமிடெட் டேட்டாவும் கைக்கு வந்த பிறகு, சோஷியல் மீடியாவுல முகமூடி போட்டுக்கிட்டு சுத்தும்போது இந்த ரெண்டு பழக்கமும் வன்மமா மாறுது. நேர்ல பார்த்து பேச தைரியம் இல்லாதவன், கமெண்ட் செக்ஷன்ல போயிட்டு கெட்ட வார்த்தையில வன்மத்தைக் கக்குறதும், அருவருப்பான டபுள் மீனிங்ல கமெண்ட் அடிக்கிறதும் இணையத்துல பெருகிப்போச்சு.
உண்மையைச் சொன்னா, நண்பர்களுக்குள்ள ஜாலியா கிண்டல் பண்ணி சிரிக்குற வரைக்கும் இதெல்லாம் ஒரு சின்ன எண்டர்டெயின்மெண்ட் தான். ஆனா, அதுவே ஒரு பழக்கமா மாறி, எந்த இடத்துல என்ன பேசணும்னு தெரியாம, எதிரில இருக்குறவங்களை, சம்பந்தப்பட்டவங்களை Uncomfort-ஆக்கினா அது வக்கிரக் குணமா மாறிடும்.
சுருக்கமாச் சொல்லப்போனா... நண்பர்களோட டீக்கடையில உட்கார்ந்து (யாரையும் பாதிக்காத வகையில்) பேசும்போது வர்ற டபுள் மீனிங்கும் கெட்ட வார்த்தையும் ‘காமெடி’! ஆனா, அதுவே எல்லா இடத்துலயும் கொப்பளிச்சு வந்தா... அது ‘வியாதி’!
ஆடிக்கிருத்திகை.. வியாழன் மாலை முதல் வெள்ளி மாலை வரை.. முருகனை வழிபடலாம்
கிருத்திகை நாயகனே கீர்த்திகளை தருபவனே..!
விண் மகளே... பூமித்தாய் நனைந்திடவே பூலோகம் வந்தாயோ...!
Double Meaning talks: மனிதர்கள் எப்போது டபுள் மீனிங் + கெட்ட வார்த்தையில் பேச ஆரம்பிக்கிறார்கள்?
Fist TVK Govt Budget: தமிழக பட்ஜெட் 2026 : தவெக அரசால் பெயர் மாற்றப்பட்ட 2 திட்டங்கள்
பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை...ஸ்டிக்கர் ஒட்டும் அரசு : எடப்பாடி பழனிச்சாமி கடும் விமர்சனம்
பட்ஜெட் பூஜ்ஜியம்...மக்களுக்கு ஏமாற்றம் தரும் பட்ஜெட் : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
ஆன்லைனில் முன்பதிவு மூலம் டாஸ்மாக் மது விற்பனை : அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு
சிந்தனைச் சிதறல்.. முன்மதியையும் தற்காப்பையும் உமதாக்குவதில் உறுதியாய் இருங்கள்
{{comments.comment}}