- செ. சாந்தி சின்னத்தம்பி
அது ஒரு கனாக்காலம்...
பள்ளிக்காலம் முடிந்து
கல்லூரியில் காலடி வைக்க....
மின்மினிகள் மனதில் பறக்க எண்ணியிருந்த நேரம்....
இருந்ததோ ஓர் இருபாலர் அரசுக் கல்லூரி...
அதில் தடம் பதித்தால் தடம் மாறிட நேரிடுமோ எனத் தந்தை அஞ்சியதால்...
அஞ்சல் வழிக் கல்வியே போதுமெனத் தொடர்ந்த நேரம் ...
கல்லூரி வாழ்க்கை என்பது கனவாக... கதையாக....
மாற்றியதோ காலம் மாறியதோ சூழல்...

நனவாக இருந்திருந்தால்....
நடந்திருக்கும் யாவையும் மாறி இருக்குமோ ?...
இருள் என்னும் அஞ்ஞானம் இன்னும் விலகி இருக்குமோ? ...
எட்டு வைத்த அடிகள் வேறு ஏற்றும் தந்திருக்குமோ ?....
சட்டென்று ஒரு வெறுமை மனதில் இடராதிருந்திருக்குமோ?...
இருப்பினும் என்ன? கவி வழியே புது நடை போட...
பாதை வகுக்கவே மாற்றியதோ.... காலம்
மாறியதோ ...சூழல்!
(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர் (ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4. சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)
கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!
செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்
"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி
கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை
பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?
"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"
short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!
சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!
Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!
{{comments.comment}}