சிந்தனைச் சிதறல். . உணவும் ஓய்வுமே உழைப்பிற்கான ஆற்றல் மூலம்!
- அ.தாமஸ்
உழைப்பவன் ஓய்வை மறுக்கிறான்; ஓய்வில் இருப்பவனோ உழைப்பை வெறுக்கிறான்.
உழைப்பவன் உழைப்பின் மீது கொண்ட நேசத்தால் உணவை மறந்து உழைப்பதால் எடை குறைந்து நடைதளர்கிறது. காலம் கடந்தே உணர்கிறான் உழைக்க உணவு தேவை என்று.
ஓய்வை ரசிப்பவனும் உழைப்பின் உன்னதம் அறிந்ததாலோ உண்பதைக் கூட உயரிய உழைப்பு எனக் கருதி உழைப்பதிலும் மேலாய் உண்பதிலே நாட்டம் கொள்கிறான்.
ஓய்வில்லாமல் உழைப்பதும் உழைப்பில்லாமல் உண்பதும் உடலுக்கும் மனதிற்கும் பேராபத்தையே தருவிக்கும்.
உழைப்பவன் உண்ணும் நேரத்தை ஓய்வெனக் கருதுகிறான். ஓய்வில் இருப்பவனோ உண்பதையே உழைப்பெனக் கருதுகிறான்.
உழைப்புக்கேற்ற ஓய்வும், உணவும் எந்த அளவிற்கு அவசியமோ அதேபோல் ஓய்விற்கேற்ற உழைப்பும்,உணவும் அவசியம்.
உணவும் ஓய்வுமே உழைப்பிற்கான ஆற்றல் மூலம் என்பதை உணர்ந்து உண்போம், உழைப்போம் தேவைக்கு ஓய்வோம்.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)