சித்தர்கள் கூறிய உணவே மருந்து
- கா.சா.ஷர்மிளா
கம்பு உடலுக்கு தெம்பு...
சாமை உண்டால் ஆமை வயது...
திணை இதயத்திற்கு துணை...
வரகு உண்டால் வருங்காலமும் பார்க்கலாம்...
குதிரை பலம் பெற குதிரைவாலி ...
கேழ்வரகுக்கு சர்க்கரையே விலகு ...
சோம்பல் நீக்கும் சோளம்..
பனிவரகு புற்றுநோயே விலகு.,.
கம்பு, சோளம்,வரகு பனிவரகு சாமை திணை குதிரைவாலி கேழ்வரகு போன்ற சிறு தானியங்களை நாம் உணவாக உட்கொள்ள வேண்டும்.
நாம் இன்றைக்கு அதிக அளவில் பயன்படுத்தும் அரிசி கோதுமையை விட இவை அதிகளவில் ஆற்றலை தரக்கூடியவை மற்றும் புரதச்சத்து,நார்ச்சத்து மிகுந்தது. பைட்டிக் அமிலம் குறைந்தது. இரும்பு கால்சியம் மற்றும் வைட்டமின்களைக் கொண்டது. இவை பாரம்பரிய உணவு வகையை சார்ந்தது.
இப்படிப்பட்ட சிறுதானிய உணவுகளை நாம் அதிக அளவில் அன்றாட உணவில் சேர்ப்பதனால் சர்க்கரை நோய், உடல் பருமன் ரத்த கொதிப்பு போன்ற நோய்களிலிருந்தும் புற்றுநோய்களிலிருந்தும் பற்பல நோய்களிலிருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
நம் முன்னோர்கள் கூறிய அவர்கள் அதிக அளவில் பயன்படுத்திய உணவு முறைகளை நாம் கையாளுவோம், பயன்படுத்துவோம்.. நோயின்றி வாழ்வோம்.. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.. அச்செல்வத்தை நாம் அனைவரும் பெறுவோம்
(கவிஞர் கா.சா.ஷர்மிளா, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம், பு. முட்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி (இந்து)யில் பணியாற்றுகிறார்)