நெருக்கடி நேரத்துல.. மண்டையைப் பிச்சுக்காதீங்க.. ஈஸியா முட்டைக் குழம்பு வச்சு அசத்துங்க..!

Feb 23, 2026,12:34 PM IST

- கவிஞர் க. முருகேஸ்வரி


என்னங்கடா இது... வீட்ல ஒரு சாமானும்‌ இல்லையே... விருந்தாளி வேற வீடு தேடி வந்துட்டாங்களேனு..... சில நேரங்கள்ல‌ என்ன சமைக்கலாம்னு மண்டைய பிச்சுக்குவோம்ல... அந்த மாதிரி நேரத்துல வெறும் வெங்காயம் தக்காளி இருந்தா போதும்.... பக்கத்து கடையில உங்க வீட்டுக்காரர முட்டை வாங்கிட்டு வரச் சொல்லிட்டு நான்‌ சொல்ற மாதிரி முட்டைக் குழம்பு செஞ்சு அசத்திடுங்க....


வாங்க பார்க்கலாம்...


முட்டைக் குழம்பு 


தேவையான பொருட்கள் 




பெரிய வெங்காயம் -4

தக்காளி -4

பச்சை மிளகாய்-2

பூண்டு -4 பல் 

சோம்பு -2 ஸ்பூன்

தேங்காய் -கால் முடி

முட்டை-தேவைக்கேற்ப


செய்முறை 


முட்டையை வேக வைத்து தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்.


வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.பின்னர்‌ தக்காளி சேர்த்து வதக்கவும்.வதங்கிய‌ பிறகு தேவையான அளவு உப்பு மற்றும் மசால் பொடி சேர்த்து சிறிது நேரம் கிளறி‌ விடவும்.


பின்னர் தேங்காய் பூண்டு சோம்பு சேர்த்து நன்றாக அரைத்து அதை குழம்பில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கொதிக்கும் போது அவித்த முட்டையை அதில்‌‌ போடவும்.


சிறிது நேரம் கழித்து இரண்டு அல்லது மூன்று முட்டைகளை உடைத்து ஊற்றி அடுப்பைக் குறைத்து வைக்கவும்.சிறிது நேரம் கழித்து தணலைக் கொஞ்சம் அதிகமாக்கி இரண்டு கொதி விட்டு இறக்கவும்....


சூடான சாதத்தில் முட்டைக் குழம்பை ஊற்றி மூக்குப் பிடிக்க‌‌ சாப்பிடலாம்...!


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில்.. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: 11 மாவட்டங்களில் இன்றே மழை

news

ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் அடுத்த தலைமுறைக்கானதா?

news

US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!

news

ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!

news

ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!

news

Chettinadu Recipes: அருமையான செட்டிநாட்டு ரெசிப்பி .. முருங்கைக் கீரை எள்ளு பொடி!

news

Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?

news

சிவசங்கரி.. சமூக நியாயங்களையும்.. மனித உணர்வுகளையும் ஆழமாகத் தொட்டவர்!

news

Travel Time: அதிகம் கேட்கப்படாத ஹாரன்.. மனம் கவரும் கேரளம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்