அன்புள்ள அப்பா!

Aug 29, 2026,02:33 PM IST

- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி 


நமது நலனுக்காகச்

சிறுவயதில் இளம் வயதில் 

அப்பா கண்டித்ததை

 எல்லாம் 


தவறாகப் புரிந்து கொண்டு 

அப்பா மனம் நோகும்படி

வார்த்தைகளால் 

வசைபாடி விட்டு 


இன்று அவர்கள் செய்ததெல்லாம் 

நமது நலனுக்குத் தான் 

என்று புரியும் போது அவர்கள் 

வானுலகம் சென்று விட்டார்கள்! 




இப்போது எந்தக் காகத்தைப்

பார்த்தாலும் 

இது நம் அப்பாவாக 

இருக்குமோ என்று 


மனது நினைக்கிறது!

காகத்துக்குச் சாதம் வைத்துக்

காகம் ஏதும் 

வரவில்லை எனில் 


அப்பாவிற்கு இன்னும் 

நம் மீது கோபம் 

தீரவில்லையோ என்று 

மனது வருந்துகிறது! 


கண் கெட்ட பிறகு 

செய்யும் சூரிய நமஸ்காரமாய்க்

காலம் கழிகிறது! என்ன ஒரு வடிகட்டிய முட்டாள் நான்!


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்