SIR வேண்டாம் என்று திமுக உச்ச நீதிமன்றம் சென்றால், அதிமுக SIR வேண்டும் என செல்வோம்: ஜெயக்குமார்
சென்னை: முதல்வருக்கு SIR என்றாலே அலர்ஜிதான். மக்களை திசைதிருப்பவே திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம். SIR வேண்டாம் என்று திமுக உச்ச நீதிமன்றம் சென்றால், அதிமுக SIR வேண்டும் என உச்ச நீதிமன்றம் செல்வோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் SIR பணிகளை மேற்கொள்ளப் போவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவத்தில், திமுக சார்பில் சென்னை தி.நகரில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு 64 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில், சார் பணிகளை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், முதல்வருக்கு SIR என்றாலே அலர்ஜிதான். மக்களை திசைதிருப்பவே திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம். SIR வேண்டாம் என்று திமுக உச்ச நீதிமன்றம் சென்றால், அதிமுக SIR வேண்டும் என உச்ச நீதிமன்றம் செல்வோம். இறந்தவர்களுக்கு வாக்குரிமை இருந்து, இருப்பவர்களுக்கு வாக்குரிமை இல்லாதது ஜனநாயக கேலிக்கூத்து. அதை மாற்றுவதற்காகவே SIR நாங்கள் வரவேற்கிறோம்.
நேர்மையாக, வெமிப்படைத்தன்மையோடு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு ஏன் இவர்கள் பயப்பட வேண்டும். பீகாரை தமிழ்நாட்டுடன் ஒப்பிட வேண்டாம். இறந்தவர்களுக்கு வாக்கு இருக்கிறது, உயிருடன் இருப்பவர்களுக்கு வாக்கு இல்லை. இதை விட வேறு ஒன்று ஜனநாயகத்திற்கு கேலிக்கூத்து இல்லை. இதனால் தான் நாங்கள் SIRயை நாங்கள் வரவேற்றோம் என்று தெரிவித்துள்ளார்.