நான் எந்த சூழ்நிலையிலும் தனிக் கட்சி ஆரம்பிப்பேன் என்று சொல்லவில்லை ஓ. பன்னீர்செல்வம்!

Meenakshi
Dec 05, 2025,01:54 PM IST

சென்னை: நான் எந்த சூழ்நிலையிலும், எப்போதுமே தனிக்கட்சி ஆரம்பிப்பேன் என்று சொல்லவில்லை என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று திரும்பியுள்ள நிலையில், இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி சென்னை மெரீனாவில் உள்ள அவரது நினைவிடத்தில் சென்று மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், 


மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சென்று மரியாதை நிமிர்த்தமாகவே சந்தித்தேன். அதிமுகவை எம்ஜிஆர் எந்த நோக்கத்தில் உருவாக்கினாரோ, ஜெயலலிதா அந்த இயக்கத்தை எப்படி வெற்றிகரமாக வழிநடத்தி நிலைநிறுத்தினாரோ அந்த நிலையில் மீண்டும் அதிமுகவில் உருவாக வேண்டும் என்பதே தொண்டர்களின் எண்ணம். இதுவே தமிழக மக்களின் கருத்தாக இருப்பதாக அமித்ஷாவிடம் தெரிவித்துள்ளேன்.




செங்கோட்டையனிடம் நானும் பேசவில்லை. அவரும் என்னுடன் பேசவில்லை. என்னுடைய அடுத்த கட்ட நகர்வு தமிழக மக்களின் எண்ணப்படி தான் இருக்கும். அதிமுகவில் இருந்து பிரிந்தவர் ஒன்று சேர வேண்டும் என்பதற்காகவே அமித்ஷாவைச் சந்தித்தேன். முன்னர் அதிமுகவில் உள்ள அனைவரும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தினேன். நான் எந்த சூழ்நிலையிலும் எப்போதும் தனிக்கட்சியைத் தொடங்குவேன் என்று சொல்லவில்லை என்று தெரிவித்துள்ளார்.