டெல்லி : தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் (OPS)கடந்த 2 நாட்களுக்கு முன் தமிழகத்தில் இருந்து புறப்பட்டு கொச்சி சென்றார். பிறகு அங்கிருந்து தனது தனி பாதுகாவலர்கள் கூட இல்லாமல் நள்ளிரவில் புறப்பட்டு டெல்லி சென்றுள்ளார். உரிமை மீட்பு குழுவை, உரிமை மீட்பு கழகம் என்ற பெயரில் புதிய கட்சியாக பதிவு செய்வதற்காக தேர்தல் கமிஷன் அதிகாரிகளை சந்திக்க தான் அவர் சென்றதாக சொல்லப்பட்டது.
ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்துப் பேசியுள்ளாராம் ஓபிஎஸ். இன்னும் சில பாஜக தலைவர்களை சந்திக்கவும் அவர் நேரம் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அமித்ஷா உடனான 20 நிமிட சந்திப்பின் போது, ஓ.பன்னீர்செல்வம் புதிய கட்சி தொடங்க உள்ளதாகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைய உள்ளதாகவும் பரவலாகப் பேசப்படுகிறது.

இந்த சந்திப்பு, ஓ.பன்னீர்செல்வத்தை NDA கூட்டணியில் இணைக்க பாஜக மத்திய தலைமை எடுக்கும் புதிய முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. வரும் நாட்களில் ஓ.பன்னீர்செல்வம் தேசிய பாஜக தலைவர்களுடன் மேலும் ஆலோசனைகள் நடத்த திட்டமிட்டுள்ளார். அதன் பின்னரே தனது அரசியல் நிலைப்பாட்டை இறுதி செய்வார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் நடந்த இந்த பேச்சுவார்த்தைகள், தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் அடுத்த சில வாரங்களில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் ஒரு பிரிவை நடத்தி வருகிறார். சமீபத்தில் அவர் தீவிர அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். 2024 மக்களவைத் தேர்தலில் NDA கூட்டணியில் ஒரு பகுதியாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடி மாநிலத்திற்கு வருகை தந்தபோது அவரை வரவேற்க தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், தனக்கு மரியாதை இல்லை என்று கூறி கூட்டணியில் இருந்து வெளியேறினார். அப்போதைய பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்கள் அவரை சமாதானப்படுத்த முயன்றும் அது பலனளிக்கவில்லை.
சமீபத்தில், ஓ.பன்னீர்செல்வம் தனது நிலைப்பாட்டை மேலும் கடுமையாக்கினார். நவம்பர் 24 அன்று ஆதரவாளர்களுடன் நடத்திய கூட்டத்தில் ஒரு காலக்கெடுவை விதித்தார். டிசம்பர் 10 அன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்குள் தன்னை மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். இது நடக்கவில்லை என்றால், டிசம்பர் 15 அன்று ஒரு "முக்கிய அறிவிப்பை" வெளியிடுவேன் என்றும் அவர் அறிவித்தார். இது அவர் தனது சொந்தக் கட்சியைத் தொடங்குவதற்கான அறிவிப்பாக இருக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சந்திப்புக்கு முன்பு, ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியையோ அல்லது அமித் ஷாவையோ சந்திக்க நேரம் கிடைக்காமல் இருந்தார். ஆனால் இப்போது, அமித் ஷா தனது அட்டவணையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடம் கொடுத்துள்ளார். இது ஒரு முக்கிய அரசியல் நகர்வாகப் பார்க்கப்படுகிறது. இதை போல் அமமுக தலைவர் டிடிவி. தினகரனையும் என்டிஏ கூட்டணியில் இணைக்க பாஜக முயற்சி வருகிறதாம். அடுத்த வாரம் அமித்ஷா தமிழகம் வரும் போது வலிமையான என்டிஏ கூட்டணி இறுதி செய்யப்பட்டிருக்கும் என சொல்லப்படுகிறது.
திமுக.,வுடன் பேச்சுவார்த்தை நடத்திய காங்கிரஸ் ஐவர் குழு...பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?
ஓபிஎஸ் டெல்லி விசிட்...பாஜக., தலைவர்களுடன் சந்திப்பு...டெல்லியில் என்ன நடக்கிறது?
அவசரப்பட்டு துணியை துவைச்சிராதீங்க.. இன்னும் முடியல.. மழை தொடரும்...இந்திய வானிலை மையம் தகவல்!
ரஷ்ய அதிபரின் டெல்லி வருகை...தாறுமாறாக ஏறிய ஹோட்டல் கட்டணங்கள்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 04, 2025... இன்று நம்பிக்கை அதிகரிக்கும் நாள்
தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் உடல் நலக்குறைவால் காலமானார்
குடும்பங்களுக்கு வருமானத்தை ஈட்டி தரும் வீட்டுக்கூரை சூரிய மின்சக்தி திட்டம்
ஈரோட்டில் வாழைப்பழம் சாப்பிட்ட சிறுவன் மூச்சு திணறி பலி!
வருகிறார் வா வாத்தியார்.. ரீலீஸ் தேதி அறிவிப்பு.. 3வது லிரிக்கல் வீடியோவும் வெளியானது
{{comments.comment}}