விருதுக்கும் மேலான அன்பு மடல்கள்!
கவிஞர் க. யாஸ்மின் சிராஜுதீன்
இன்று அக்டோபர் 9 - உலக அஞ்சல் தினம் (World Post Day).
கடிதம் எழுதுவது என்பது நம் எண்ணங்களையும் அன்பையும் பிறருடன் பகிர்ந்துகொள்ளும் அழகான வழியாகும்.
அத்தகைய அன்பான அழகாண தருணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்
வாங்க பார்ப்போம்
நானும் எனது மாணவர்களும்(வகுப்பு 4 மற்றும் 5) வகுப்பறையில் சுவாரஸ்யமாக கலந்துரையாடல் செய்வது வழக்கம். முதல் பருவ தொகுத்தறி மதிப்பீடு நடந்து கொண்டிருந்த தருணம் பிற்பகல்தான் தேர்வு முற்பகல் அந்தநாள் தேர்வுக்கு திருப்புதல் செய்வோம்.
அப்போது நாளைக்கு தேர்வு முடிந்து முதல் பருவ விடுமுறை விடப் போகிறார்கள் எங்களுக்கு Sweet வேண்டும் என்றார்கள்.. சரி ...பிள்ளைகள் கேட்கிறார்களே என்று, சரி என்றேன். மறுநாள் கேசரி செய்து அனைத்து மாணவர்களுக்கும் கொடுத்தேன் ( வகுப்பு 1முதல் 8 வரை) அனைவரும் மகிழ்ச்சியாக ரசித்து உண்டார்கள்.
என் வகுப்பு மாணவர்கள் நாங்கள் கேட்டதும் செய்து எடுத்து வந்து விட்டீர்கள்.. என்று பெருமைப்பட்டார்கள். எங்க miss எங்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்று பேசிக் கொண்டார்கள் தங்களுக்குள்.. அப்போது நான் இன்று இன்னொரு மகிழ்ச்சியான செய்தியும் உண்டு. இன்றுதான் நான் ஆசிரியர் பணிக்கான ஆணையைப் பெற்றநாள்.
நாளை இப்பள்ளியில் நான் பணியில் சேர்ந்த நாள். இத்துடன் 12 ஆண்டுகள் நிறைவடைந்து 13 ஆம் ஆண்டு தொடங்குகிறது என்றேன்.. அதைக் கொண்டாட, அதற்கு என்ன பெயர் என்றனர், job anniversary என்றேன். அவர்களுக்குள் கலந்து ஏதோ பேசிக்கொண்டார்கள்..
மதிய உணவு இடைவேளையில் மதிய உணவு முடித்துவிட்டு அனைவரும் அமர்ந்து ஏதோ வரைந்தார்கள், எழுதினார்கள். நான் தேர்வு தாள்களை திருத்திக்கொண்டே அவர்களையும் கவனித்தேன்.. பிறகு அனைவரும் ஆளுக்கு ஒரு கடிதம் அதனுடன் ஒரு பேனா வைத்து happy job anniversary என்றார்கள். நான் இதை சற்றும் எதிர் பார்க்கவில்லை .. எனக்குள் மிகப்பெரிய சந்தோஷம் மிகப்பெரிய விருது கிடைத்தது போல.
அந்த கடிதங்கள் heart வடிவம், சதுர வடிவமாக இருந்தன சரி என்று பெற்றுக்கொண்டேன்.. அக்கடிதங்களை ஆர்வமாக படித்தேன். அதில் mom and teacher job anniversary மற்றும் என் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி அழகாக படங்கள் வரைந்து இருந்தது. ஒரு மாணவி மட்டும் மறுநாள் கடித உரையை அவளே செய்து கடிதம் உள்ளே வைத்து MISS உங்களுக்கு ஒரு Surprise என்று நீட்டினாள்.
உண்மையில் இது மிகப்பெரிய சர்பிரைஸ் கடித உரையின் மேல் Mom, I love you teacher, பின்னர் என்பெயர் எழுதி இருந்தது. வெளிப்பக்கமே அருமை என்றால் கடிதம் எப்படி எழுதி இருப்பாள் படிக்க ஆர்வமாக இருந்தது. பிரித்து பார்த்தேன், படித்தேன் heart வடிவமாக job anniversary என எழுதிய இரண்டு heart , சதுர வடிவில் Mom and Teacher ,job anniversary mom என எழுதிய இரண்டு சதுர வடிவங்கள் அழகாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தன.
இப்போதாங்க ஹைலைட்
இன்னொரு காகிதத்தில் அழகான இரண்டு ஆங்கில கவிதைகள் தலைப்பு 1.Teacher song 2. Poem on teacher இறுதியில் I love you teacher என எழுதி இருந்தது.. இந்த அருமையான கடிதங்களை வாசித்தேன். என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இதைவிட வேறென்ன விருது வேண்டும் ஆசிரியர்களுக்கு. அனைத்தும் heart கேடயங்கள் மறக்க முடியாத அன்பு உள்ளங்கள்..
வீட்டில் மற்றும் நண்பர்களிடத்தில் மாணவர்கள் எனக்கு எழுதிய கடிதங்களை காட்டி சிறு பிள்ளை போல மகிழ்ந்தேன்.. பள்ளி விடுமுறை முடிந்து இரண்டாம் பருவம் தொடங்கியது. அவர்களின் கடிதம் எழுதிய அன்பை பாராட்டி இனிதே தொடங்கியது. ஆசிரியர் பணி கடவுள் அளித்த பரிசுதான். அதுவும் தொடக்கக்கல்வி என்பதில் பெருமைதான்...
ஆசிரியர்களே மாணவர்களின் அன்னை என்பதில் பெருமையே...
கலந்துரையாடல் மிகுந்த வகுப்பறையே உயிரோட்டமான வகுப்பறை primary level எனில் அன்பிற்கு குறைவே இல்லை.
இப்பணியை எனக்களித்த எல்லாம் வல்ல இறைவனைத் தொழுது வணங்குகிறேன்..
ரோஜா பூந்தோட்டம் என் வகுப்பறையே
மணம் வீசி பூத்து குலுங்குவர் என் மாணவச்செல்வங்களே.
நான் ஒரு ஆசிரியராக ஆவதற்கு எனக்கு கற்பித்த ஆசியர்கள், பெற்றோர், கணவர், குடும்பத்தார்கள், நண்பர்கள் அனைவருக்கும் என் பணிவான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..
உலக அஞ்சல் தினத்தில் இக்கட்டுரையை தங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சியடைகிறேன்...
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)