மழைக்கு இதமான இட்லி, தோசைக்கு சுவையான பொட்டுக்கடலை சாம்பார்!

Su.tha Arivalagan
Oct 23, 2026,12:19 PM IST

- கவிஞர் க. யாஸ்மின் சிராஜுதீன்


தினமும் சட்னி, பருப்பு சாம்பார் இதையே திரும்ப திரும்ப செய்துட்டு இருக்கோமே இன்றைக்கு ஏதாவது  special  ஆஆஆ...செய்யலாமான்னு நினைக்கிறீங்களா.


வாங்க simple ஆஆஆ... சுவையா, மணமா, மழைக்கு ஏற்ற இதமா பொட்டுகடலை சாம்பார் எப்படி செய்யலாம்னு பார்ப்போம்...!


தேவையான பொருட்கள்




1.பொட்டுக்கடலை 

2. வெங்காயம் 

3.தக்காளி 

4.பச்சை மிளகாய் 

5.சாம்பார் பொடி அல்லது  தனிமிளகாய் பொடி  

6.மஞ்சள் தூள் 

7.உப்பு – தேவையான அளவு

8.தண்ணீர் 

9.கொத்தமல்லித் தழை – சிறிதளவு

10.கறிவேப்பிலை 

11.எண்ணெய்  

12.கடுகு 

13.உளுத்தம் பருப்பு  

14.காய்ந்த மிளகாய்

15.பச்சைமிளகாய் 

16 .பெருங்காயம் – ஒரு சிட்டிகை


செய்முறை


வாங்க என் அருமை சகோதரிகளே, தேவையான பொருட்கள் பார்த்தாச்சு, இப்ப எப்படி செய்யலாம்னு பார்ப்போம்...!!!


முதல்ல வெங்காயம் அளவு எல்லாம் நம்ம குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்ப எடுத்துக்குங்க.. இருந்தாலும் அளவு சொல்லணுமில்ல, அதனால இரண்டு நபருக்கான சாம்பார்  அளவு பார்ப்போம். சின்ன வெங்காயமா இருந்தா 4,பெரியது என்றால் 1 போதும்.


வெங்காயத்த நீளவாக்குல மெலிதாக நறுக்கணும். அப்புறம் தக்காளி 2, பொடியா நறுக்கணும். பூண்டு 5 பல் தட்டி வச்சுக்கணும். காய்ந்த இரண்டு, பச்சைமிளகாயை நீளவாக்குல இரண்டா நறுக்கி போடலாம். அடுப்பை பற்றவைத்து பாத்திரம் சூடேறியதும், எண்ணெய் தேவையான அளவு ஊற்றி எண்ணெய் காய்ந்ததும்  கடுகு ,சீரகம், ஒரு தேக்கரண்டி உளுந்து, வெந்தயம், கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் போட்டு தாளிச்சி, தட்டிவச்ச பூண்டு, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.


சிறிது உப்பு சேர்க்கவும். பின்னர்  நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதங்கிய பின், மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை,  மிளகாய்தூள் காரத்திற்கு ஏற்ப சேர்க்கவும். பி்ன்னர்  3 டம்ளர் அல்லது தேவைக்கு ஏற்ப தண்ணீர் சேர்க்கவும். சிறிது நேரம் தண்ணீர் கொதிக்கும்வரை மூடி வைக்கவும்.  




பிறகு அரை கப் அல்லது தேவைக்கு ஏற்ப பொட்டுக்கடலை  மிக்சி ஜாரில் போட்டு நைசாக அரைக்கவும். பின்னர் தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் அரைத்துக்கொள்ளவும். பின்னர் தண்ணீர் கொதித்தவுடன் அரைத்த பொட்டுக் கடலையை சேர்த்து 10 நிமிடம்  கொதிக்க விடவும். பின்னர் பெருங்காயம் ஒரு சிட்டிகை சேர்த்து கிளறவும்.


விருப்பப்பட்டால் ஒரு தேக்கரண்டி நெய் சேர்க்கவும். பின்னர் கொத்தமல்லி , கறிவேப்பிலை தூவி இறக்கவும். 


அப்பப்பா... என்னே! மணம் ! சும்மா சாப்பிட தூண்டுது இல்ல! 


சூடான இட்லி, மொறுமொறுப்பான தோசையுடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்! 


சூடா பரிமாறுங்க, சுவையா சாப்பிடுங்க .உண்மையா ரொம்ப சுவையான சாம்பார்தாங்க...  இரண்டு இட்லி, தோசை சேர்த்து சாப்பிடுவீங்க பாருங்க...


(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)